குஜராத்தில் உள்ள 24 கிராமங்களில், மது (Alcohol)அருந்துவோரை தண்டிக்கும் விதமாக, அவர்களை இரவு முழுதும் கூண்டில் அடைத்து வைக்கும் நடைமுறையை, நாட் சமூகத்தினர் பின்பற்றி வருகின்றனர்.
குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, நாட் சமூகத்தினர், தங்கள் சமூக மக்களை நல்வழிப்படுத்தும் நோக்கத்தில், ஒரு யுக்தியை பின்பற்றி வருகின்றனர்.
நடைமுறை அமல்
கடந்த, 2017ம் ஆண்டு, ஆமதாபாத் மாவட்டத்தின் மோதிபூரா கிராமத்தில், மது அருந்துவோருக்கு தண்டனையாக, அவர்களிடம் இருந்து, 1,200 ரூபாய் அபராதம் வசூலிக்கும் நடைமுறையை, நாட் சமூகத்தினர் அறிமுகம் செய்தனர். இது பெரிய தொகை எனக்கூறி இதற்கு எதிர்ப்பு எழுந்தது.
இதையடுத்து குடிபோதையில் நடமாடும் நபர்களை, ஒரு இரவு முழுதும் கூண்டில் அடைத்து வைக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. இது தற்போது மாநிலத்தின், 24 கிராமங்களில் உள்ள நாட் சமூக மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கூண்டில் அடைக்கப்படும் அந்த நபர்களுக்கு, ஒரு பாட்டில் குடிநீர் மட்டுமே வழங்கப்படுகிறது.
வன்முறை குறைவு
இது குறித்து மோதிபூரா கிராம தலைவர் பாபு நாயக் என்பவர் கூறியதாவது:இந்த தண்டனையின் விளைவாக, நாட் சமூக மக்கள் பலரும், மது அருந்துவதை நிறுத்திவிட்டனர். மேலும் கிராம வீடுகளில், பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை சம்பவங்களும் பெருமளவு குறைந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க
Share your comments