1. மற்றவை

குறைந்த விலையில் வீடு, நிலம் வாங்க சூப்பர் வாய்ப்பு: பொதுத்துறை வங்கியின் மெகா ஏலம்!

R. Balakrishnan
R. Balakrishnan
PNB mega Auction

சொந்தமாக வீடு வாங்க வேண்டும், நிலம் வாங்க வேண்டும், சொத்துகள் ஏதேனும் வாங்க வேண்டும் என விருப்பம் பரவலாக இருப்பதுதான். அதுவும், மார்க்கெட் விலையை விட குறைந்த விலைக்கு வீடு, நிலம், கடை மற்றும் தொழில்துறை சொத்துகள் கிடைத்தால் எப்படி இருக்கும்? நிஜமாகவே இதற்கு ஒரு சூப்பரான வாய்ப்பு வந்துள்ளது.

பிஎன்பி ஏலம்

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank) மெகா மின்னணு ஏலத்தை (Mega e-Auction) நடத்துகிறது. இந்த மெகா ஏலம் நாளை (நவம்பர் 29) நடைபெறவுள்ளது.

குறைந்த விலை

இந்த ஏலத்தின் மூலம் வீடு, நிலம் உள்ளிட்ட பல்வேறு சொத்துகளை மிக மிக குறைவான விலைக்கு வாங்க முடியும்.

என்னென்ன சொத்துகள்?

இந்த மெகா ஆன்லைன் ஏலத்தில் வீடுகள் மட்டுமல்லாமல் பல்வேறு சொத்துகள் விற்பனைக்கு வருகின்றன. பஞ்சாப் நேஷனல் வங்கி வெளியிட்டுள்ள தகவல்படி, வீடு, நிலம், வணிக சொத்துகள், தொழில்துறை சொத்துகள் போன்றவற்றை இந்த ஏலத்தின் வாயிலாக வாங்கலாம்.

சட்டப்படி ஏலம்

சர்ஃபேசி சட்டத்தின் கீழ் வெளிப்படைத் தன்மையுடன் வீடுகளும், வணிக சொத்துகளும் ஆன்லைன் ஏலத்தில் விற்பனை செய்யப்படுவதாக பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது. இந்த ஏலத்தில் நாடு முழுவதும் உள்ள சொத்துகள் விற்பனைக்கு வருகின்றன. எனவே, வெளிமாநிலங்களில் உள்ள சொத்துகளையும் இந்த ஏலத்தின் வாயிலாக வாங்க முடியும்.

பஞ்சாப் நேஷனல் வங்கி நடத்தும் ஏலத்தில் பங்கேற்க https://ibapi.in/ இணையதளத்துக்கு சென்று பதிவு செய்துகொள்ளவும். அருகே உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை வாயிலாகவும் தகவல் தெரிந்துகொள்ளலாம். வங்கியில் கடன் வாங்கி வீடு, நிலம், வணிக சொத்துகள் போன்றவற்றை வாங்கிவிட்டு, கடன்களை சரியாக செலுத்தாதவர்களிடம் இருந்து சொத்துகள் கைப்பற்றப்படும். இதுபோன்ற சொத்துகளே ஏலத்தில் விற்பனைக்கு வருகின்றன.

இதற்காகவே இந்திய வங்கிகள் இணைந்து IBAPI இணையதளத்தை உருவாக்கி சொத்துகளை ஏலத்தில் விற்பனை செய்து வருகின்றன. IBAPI இணையதளத்தில் உள்ள தகவல்படி 13083 வீடுகள், 2544 வணிக சொத்துகள், 1339 தொழில்துறை சொத்துகள், 98 வேளாண் சொத்துகள் உள்ளிட்டவை விற்பனைக்காக உள்ளன. இந்த சொத்துகளை 12 வங்கிகள் ஏலம் நடத்தி விற்பனை செய்து வருகின்றன. முக்கிய பொதுத் துறை வங்கிகளே இந்த ஏலத்தை நடத்துகின்றன. சொத்துகளை வாங்க விரும்புவோர் IBAPI இணையதளத்துக்கு சென்று, விற்பனைக்காக உள்ள சொத்துகளை பார்க்கலாம். மேலும், விருப்பப்பட்ட சொத்துகள் மீது ஏலம் கேட்கலாம்.

மேலும் படிக்க

வரப்போகுது ராயல் என்பீல்டு நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பைக்: சந்தோஷத்தில் ரசிகர்கள்!

வீட்டில் இருந்தே ரூ. 1 லட்சம் சம்பாதிக்க வாய்ப்பு: மத்திய அரசின் சூப்பரான போட்டி!

English Summary: Super opportunity to buy house and land at a low price: Public sector bank's mega auction! Published on: 28 November 2022, 03:29 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.