இந்தியாவில் Realme C55 என்று அழைக்கப்பட்டு வருகின்ற புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனை ரியல்மி நிறுவனம் அறிமுகப்படுத்தி இருந்தது. அதைக் குறித்தும், அது விற்பனையாக உள்ள தள்ளுபடி ஆஃபர் குறித்தும், அதன் அமைப்புகள் குறித்தும் இப்பதிவு விரிவாக விளக்குகிறது.
இந்தியாவில் ஒரு புதிய வடிவிலான மற்றும் சராசரியான பட்ஜெட் ஸ்மார்ட்போனை ரியல்மீ நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஃபோனின் மாடல் Realme C55 என்பதாகும். அதோடு, இது நிறுவனத்தின் மற்ற C-சீரிஸ் ஸ்மார்ட்போன்களான Realme C33 2023, Realme C33 மற்றும் Realme C30s ஆகியவற்றுடன் இணைத்துக் காணப்படுகிறது.
இந்தியாவில் ரியல்மீ நிறுவனத்தால் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட பட்ஜெட் ஸ்மார்ட்போன்களான Realme 10, Poco M5 மற்றும் Redmi 11 Prime 5G முதலான போனின் வரிசையில் புதிதாக இந்த ரியல்மி சி55 மாடலும் இணைந்து இருக்கிறது. மேலும் ஒரு புத்தம் புதிய அம்சத்துடன் ரியல்மி சி55 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த போனில் உள்ள மினி கேப்சூல் என்பது தினசரி படிகள், பேட்டரி அளவுகள், சார்ஜிங் அளவுகள் மற்றும் தினசரி டேட்டா பயன்பாடு போன்ற பல்வேறு தகவல்களைக் வெளிக்காட்டுகிறது. அதாவது டைனமிக் ஐலேண்ட் போல, லோ பேட்டரி அலெர்ட், டேட்டா அலெர்ட், இன்கம்மிங் கால்ஸ், பிளே ஆகிக்கொண்டிருக்கும் மியூசிக் உட்பட பலவகையான பேக்கிரவுண்ட் வேலைகளை பற்றிய நோட்டிஃபிக்கேஷன்களை, டிஸ்பிளேவின் மேல்பகுதியில் காட்சிப்படுத்தப்படும் ஒரு அம்சமாக இது இருக்கும். இதேபோல ஒரு அம்சம் ரியல்மி சி55 போனிலும் இருக்கிறது.
Realme C55 இந்தியாவில் மூன்று வகைகளில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. அதாவது, அடிப்படை வேரியண்ட் மாடலாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபியுடன் விற்பனைக்கு வருகின்றது. இதன் விலை ரூ.10,999 என்பதாகும். மற்றுமொரு ஆப்னான 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மாடல் விலை ரூ.11,999 ஆகும்.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பகத்துடன் கூடிய டாப் வேரியண்டின் மாடலின் விலை ரூ.13,999 க்கு விற்பனையாகும். இந்த செல்பேசியினை வாங்க வேண்டும் என எண்ணினால் மார்ச் 21 முதல் மார்ச் 27 வரை பிளிப்கார்ட்டில் முன்கூட்டிய ஆர்டர் செய்யலாம் எனக் கூறப்படுகிறது. அதோடு, மற்றொன்றான ரியல்மி சி55 போனின் விற்பனை மார்ச் 28 அன்று மதியம் 12 மணி முதல் Realme.com, Flipkart மற்றும் ஆஃப்லைன் கடைகள் வழியாகவும் வாங்கிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விற்பனை ஆஃபராக இதனை வாங்கும் பொழுது சலுகையின் ஒரு பகுதியாக, ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு 1,000 ரூபாய் வரை உடனடியான தள்ளுபடியினை Realme வழங்குகிறது. அதேபோன்று எக்ஸ்சேஞ்சில் ரூ.1,000 தள்ளுபடியையும் நிறுவனம் வழங்குகின்றது. செல்பேசியின் பேட்டரியினைப் பொறுத்தவரை 5,000mAh பேட்டரி திறன் கொண்ட 33W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜரால் ஆதரிக்கப்படுகின்றது. இது வெறும் 29 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் வசதி இருக்கின்றது.
மேலும் படிக்க
Share your comments