இந்திய மக்களுக்கும் வாழ்நாளில் சொந்த வீடு வாங்க வேண்டும் அல்லது கட்ட வேண்டும் என்பது முக்கியக் கனவாக இருக்கும் நிலையில், இதை எளிதாக்க வங்கிகள் அதிகளவிலான கடனை அளித்து வரும் நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்குக் கூடுதல் சலுகைகள் அளிக்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்குக் குறைந்த வட்டியில் வீடு கட்டுவதற்கான முன்பணத்தை (House Building Advance - HBA) 31 மார்ச் 2023 வரை பெறலாம். HBA க்கு தற்போதைய வட்டி விகிதம் 7.1% ஆகும்.
குறைந்த வட்டியில் வீடு
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் ஏப்ரல் 1, 2022 வெளியிட்ட அறிக்கையில் HBA மீதான வட்டி விகிதத்தை 7.1% ஆகக் குறைத்துள்ளது என்றும் இத்திட்டத்தின் கீழ் 31 மார்ச் 2023 வரை முன்பணம் பெறலாம் என்றும் அறிவித்துள்ளது.
7வது சம்பள கமிஷன்
7வது சம்பள கமிஷனின் பரிந்துரைகளின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு HBA வசதி வழங்கப்படுகிறது. HBA விதிகளின்படி, மத்திய அரசின் ஊழியர்கள், புதிய வீடு கட்டுதல், வீடு கட்டுவதற்கான ப்ளாட் வாங்குதல், வீடுகளை விரிவுபடுத்துதல், கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை வாங்குவதற்கு வட்டியுடன் கூடிய முன்பணத்தைப் பெறலாம்.
House Building Advance தொகையைக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு அல்லது அரசு அல்லது ஹட்கோ அல்லது தனியார் வங்கி அமைப்புகளில் இருந்து மத்திய அரசு ஊழியர்கள் வீட்டுக் கட்ட வாங்கிய அட்வான்ஸ் தொகையைத் திருப்பிச் செலுத்தும் பயன்படுத்த முடியும்.
34 மாத அடிப்படை சம்பளம்
வீடு கட்டுவதற்கான முன்பண விதிகள் (HBA) 2017ன் படி, மத்திய அரசு ஊழியர்கள் 34 மாதங்கள் வரையிலான அடிப்படை சம்பளம் அதிகபட்சமாக ரூ. 25 லட்சம் வரை HBA ஆகப் பெறலாம். வீடு/ஃப்ளாட்டின் விலை ரூ.25 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால், ஊழியர் குறைந்தபட்ச தொகையை மட்டுமே HBA ஆகப் பெறத் தகுதி அடைவார்.
10 ஆண்டுகள் பணி
எச்பிஏ பெறுவதற்கு மத்திய அரசு ஊழியர்கள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பணியில் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை 5 ஆண்டுகளாகக் குறைக்க வேண்டும் என்று ஆணையம் பரிந்துரைத்திருந்தது. மேலும், கணவன், மனைவி அரசு ஊழியர்களாக இருந்தால், இருவரும் தனித்தனியாக HBA தொகை பெற அனுமதிக்கப்பட வேண்டும் என்பதையும் பரிந்துரைத்திருந்தது.
மேலும் படிக்க
குடும்ப பென்சனில் புதிய வசதி: இனி இவர்களுக்கும் பென்சன் கிடைக்கும்!
தமிழ்நாட்டில் பழைய பென்சன் திட்டம் எப்போது வரும்: வேகமெடுக்கும் போராட்டம்!
Share your comments