தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் காலியாக உள்ள 200க்கும் மேற்பட்டப் பணியிடங்களுக்கு விரைவில் ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர். குறைந்த பட்சத் தகுதி 12ம் வகுப்பு ஆகும். தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் (MRB) இளநிலை ஆய்வாளர் மற்றும் இருட்டறை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழக மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவம் சார்ந்த பணியிடங்களை தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் நிரப்பி வருகிறது. அந்தவகையில், தமிழ்நாடு சுகாதாரத்துறையில் காலியாக உள்ள இளநிலை ஆய்வாளர் மற்றும் இருட்டறை உதவியாளர் ஆகிய பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
இளநிலை ஆய்வாளர் (Junior Analyst)
காலியிடங்களின் எண்ணிக்கை : 29
கல்வித் தகுதி (Educational Qualification)
Master’s Degree in Chemistry or Biochemistry or Microbiology or Dairy Chemistry or Food Technology, Food and Nutrition or Bachelor’s Degree in Technology in Dairy /Oil or Veterinary Sciences
சம்பளம் (Salary)
ரூ.36,400 – 1,15,700
வயதுவரம்பு (Age Limit)
இந்த பணியிடங்களுக்கு 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ST / SCA/ SC/ MBC(V) / MBC&DNC/ MBC/ BCM /BC பிரிவினர் 59 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)
இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வு 200 வினாக்களுடன் 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதற்கான கால அளவு 2.30 மணி நேரம்.
இருட்டறை உதவியாளர் (Dark Room Assistant)
காலியிடங்கள்: 209
கல்வித் தகுதி (Educational Qualification)
12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Dark Room Assistant சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம் (Salary)
ரூ.19,500 – 62,000
வயதுவரம்பு (Age Limit)
இந்த பணியிடங்களுக்கு 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ST / SCA/ SC/ MBC(V) / MBC&DNC/ MBC/ BCM /BC பிரிவினர் 59 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை
இந்த பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, Dark Room Assistant சான்றிதழ் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 20%க்கும், 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 30%க்கும், Dark Room Assistant சான்றிதழ் படிப்புமதிப்பெண்கள் 50%க்கும் கணக்கிடப்படும். எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை (How to apply)
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://mrbonline.in/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் (Fees)
இளநிலை ஆய்வாளர்
பொதுப் பிரிவினருக்கு ரூ. 1000, SC/SCA/ST/DAP பிரிவினருக்கு ரூ. 500
இருட்டறை உதவியாளர்
பொதுப் பிரிவினருக்கு ரூ. 600, SC/SCA/ST/DAP பிரிவினருக்கு ரூ. 300
விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date)
05.04.2022
மேலும் படிக்க...
தினமும் இந்த மசாலாப் பொருட்கள் - உடல் எடையை உடனேக் குறையும்!
Share your comments