வானில் நிகழும் அதிசயங்களில் சந்திர கிரகணம் மிக முக்கியமான நிகழ்வாகும். வானில் மிக அரிதான 'இரத்த நிலா' வரும் 26ம் தேதி தெரியும்'' என கோல்கட்டா பிர்லா கோளரங்க இயக்குனர் தேபி பிரசாத் துவாரி தெரிவித்துள்ளார்.
முதல் சந்திர கிரகணம்
2021 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம், வரும் 26ம் தேதி பவுர்ணமி தினத்தன்று நிகழ உள்ளது. இது குறித்து தேபி பிரசாத் துவாரி கூறியதாவது: சூரியன் (Sun), பூமி (Earth), சந்திரன் (Moon) ஆகிய கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் போது, பூமியின் நிழல் சந்திரனின் மீது விழுவதை சந்திர கிரகணம் என்கிறோம்.
தேதி மற்றும் நேரம்
வருகின்ற மே மாதம் 26ம் தேதி மிக அரிதான சந்திர கிரகணம், மாலை 3:15 முதல் 6:22 மணி வரை நிகழ உள்ளது. முழு சந்திர கிரணத்தை, கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பார்க்க முடியும். மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில், மாலை 6:15 முதல் 6:22 மணி வரை, சில நிமிடங்களுக்கு சந்திர கிரகணத்தை காணலாம். அடிவானத்தில் கீழ் நிலவு இருக்கும் என்பதால், சென்னை, மும்பை, டில்லி நகரங்களில் முழு கிரகணம் தெரியாது; பூமியின் நிழலில் ஒரு சிறு பகுதியை நிலவு கடக்கும் போது மட்டும், பகுதி கிரகணத்தை காணலாம்.
இரத்தச் சிவப்பு நிறம்
இந்த கிரகணத்திற்குப் பின், நிலவு, இரத்தச் சிவப்பு (Blood Red) நிறத்தில் வழக்கத்தை விட பிரகாசமாக காட்சி அளிக்கும். இதை 'இரத்த நிலா' (Blood Moon) என்றழைக்கிறோம். பூமிக்கு மிக நெருக்கத்தில் நிலவு வரும்போது, வளி மண்டல ஒளிச் சிதறல் காரணமாக இது ஏற்படுகிறது.
அடுத்த சந்திர கிரகணம்
அடுத்த சந்திர கிரகணம், 2022, மே 16ல் நிகழ உள்ளது. இதை இந்தியாவில் பார்க்க முடியாது. ஆனால், அதே ஆண்டு, நவம்பர் 8ல் நிகழும் சந்திர கிரணத்தை இந்தியாவில் காணலாம்.
மேலும் படிக்க
கொரோனா 3-ஆம் அலையை தடுக்க நாம் இப்போதே தயாராக வேண்டும்! இந்திய மருத்துவ சங்கம் வேண்டுகோள்!
கடன் வாங்கியோருக்கு சூப்பரான சலுகை! ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு!
Share your comments