தூய்மை பற்றிய தகவலை பரப்ப அரசு பள்ளியின் கழிவறையை மத்திய பிரதேச மந்திரி கழுவி சுத்தப்படுத்தி பரபரப்பு ஏற்படுத்தினார்.
தூய்மை இந்தியா திட்டம் (Clean India Scheme)
நாடு முழுவதும் தூய்மை இந்தியா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு முன்னெடுத்து செல்லப்படுகிறது. ஆற்றல் துறை மந்திரியாக இருப்பவர் பிரதுமான் சிங் தோமர். இவர், குவாலியரில் உள்ள அரசு பள்ளியின் கழிவறையை நீரால் கழுவி தூய்மைப்படுத்தினார்.
ஊக்கம்
இதுபற்றி அவர் கூறும்போது, மாணவ ஒருவர் என்னிடம், எங்களுடைய பள்ளியின் கழிவறைகள் தூய்மையாக இல்லை. இதனால் மாணவிகள் பல சிக்கல்களை சந்தித்து வருகின்றனர் என கூறியுள்ளார். தூய்மை பணிக்காக 30 நாட்கள் உறுதிமொழியை எடுத்துள்ளேன். இதன்படி, ஒவ்வொரு நாளும் சில கல்வி மையத்திற்கு செல்வேன். தூய்மை பணியை மேற்கொள்வேன். அனைத்து மக்களுக்கும் தூய்மை பற்றிய தகவல் சென்றுசேர வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்காக இந்த பணியை செய்கிறேன். இதனால், தூய்மையாக இருப்பது பற்றி ஒவ்வொருவரும் ஊக்கம் பெறுவார்கள் என்று கூறியுள்ளார்.
அவர், மக்கள் தூய்மையை கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டு கொண்டதுடன், பள்ளியை ஒவ்வொரு நாளும் தூய்மையாக வைத்திருக்க நகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தலும் வழங்கியுள்ளார்.
மேலும் படிக்க
இயற்கை விவசாயத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்: பிரதமர் மோடி!
Share your comments