மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 3 முதல் 5 சதவீதம் உயர்த்தத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அகவிலைப்படி
அகவிலைப்படி என்பது மத்திய அரசு ஊழியரின் மாதச் சம்பளத்தின் ஒரு முக்கிய அங்கமாக விளங்குகிறது. பணவீக்கத்தின் காரணமாக விலைவாசியில் ஏற்பட்டு உள்ள அதிகரிப்புக்கு ஈடுசெய்ய வழங்கப்படும் ஒரு கொடுப்பனவு தான் இந்த அகவிலைப்படி. சில்லறை பணவீக்க விகிதங்களைக் கருத்தில் கொண்டு DA விகிதத்தை மத்திய அரசு தீர்மானிக்கிறது.
தகுதி
அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் அரசு ஊழியர்கள் தவிர, குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களும் இந்த அகவிலைப்படி-யை பெற தகுதியுடையவர்களாக உள்ளனர். மத்திய அரசு தரவுகள் அடிப்படையில் தற்போது 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் அகவிலைப்படியைப் பெறுகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி திருத்தம் செய்யப்படும். ஆனால் அதற்கான அறிவிப்புகள் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மட்டுமே வெளியிடப்படுகின்றன.
நிறுத்தம்
கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக, அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை, கடந்த ஜூலை 2021 இல் யாரும் எதிர்பார்க்காத வகையில் 11 சதவீதம் உயர்த்தியது. இதனால் அகவிலைப்படி சதவீதம் 17% இல் இருந்து 28%யாக உயர்த்தப்பட்டது.
38%மானது
கடந்த ஆண்டு அக்டோபரில், தீபாவளிக்கு முன்னதாக, 3% (28% முதல் 31% வரை) உயர்த்தப்பட்டது, 2021 ஆம் ஆண்டு ஜூலை முதல் நடைமுறைக்கு வந்தது. இதைத்தொடரந்து இந்த ஆண்டு ஜூலை மற்றும் அக்டோபரில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டதால் மொத்த சதவீதம் 38 சதவீதத்தை எட்டியுள்ளது. 1.07.2022 தேதியை கணக்கிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களும், பென்ஷன்தாரர்களும் பயன்பெற்றுள்ளனர்.
5% உயர்த்த முடிவு
இந்நிலையில்,மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 3 முதல் 5 சதவீதம் உயர்த்தத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வரும் மார்ச் மாதம் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
மேலும் படிக்க...
PM-kisan பயனாளிகள் பட்டியல் - அதிர்ச்சியில் தமிழக விவசாயிகள்!
Share your comments