1. மற்றவை

குப்பைகளில் வீசப்பட்ட மாஸ்குகளை செங்கல் ஆக மாற்றும் மறுசுழற்சி மனிதன்

T. Vigneshwaran
T. Vigneshwaran
RECYCLE MAN OF INDIA

அனைவரும் பயன்படுத்தும் அனைத்து கொரோனா தடுப்பு கவசங்கள்  பிளாஸ்டிக்கால் ஆனவை. முகக்கவசம் , பி.பி.ஈ.கிட்கள், தலைக்கவசங்கள் அனைத்தும் அப்படியே குப்பையில் வீசப்பட்டு, சுற்றுப்புற சூழலை மாசு படுத்துகின்றன. இந்த பிரச்சனைக்கு ஒரு புதிய தேர்வைக் காணலாம்.

கொரோனா  உலகின்  இயல்பு வாழ்க்கையை மாற்றிவிட்டது. ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் முகக்கவசத்தைபோடும் கட்டாயம் வந்துவிட்டது.

கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்க நாம் முகக்கவசங்களை உபயோகிக்கிறோம். அதிலும், இரண்டாவது அலையின் தாக்கம்  அதிகம் இருப்பதால், இரண்டு முகக்கவசங்களை அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்துகின்றனர்.

முகக்கவசம் அணிந்தால் தான்  கொரோனாவில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும். ஆனால், பிளாஸ்டிக்  மூலம் தயாரிக்கப்பட்ட  தடுப்பு கவசங்கள், குப்பையில் வீசப்பட்ட பின் என்னவாகிறது? அதிலிருந்து வரும்  ஆபத்து என்ன?  இதைப் பற்றிய கவலைகள் ஒருபுறம் உள்ளது.

 பி.பி.ஈ.கிட்கள் மட்டுமல்ல,முகக்கவசம், தலைக்கவசங்கள்  பயன்படுத்தும்  அனைத்துமே பிளாஸ்டிக்கால் ஆனவை. இவை அப்படியே குப்பையில் வீசப்படுவதால், சுற்றுப்புற சூழலின் மாசு அதிகரிக்கின்றன. இந்த பிரச்சனைக்கு தீர்வு எப்படி சாத்தியம்?

இதுவும் சாத்தியம் தான், மறுசுழற்சி செய்வதன் மூலம் இது சாத்தியமாகும்… இந்தியாவின் 'மறுசுழற்சி நாயகன்' என்று அழைக்கப்படும் பினிஷ் தேசாய்,அவருக்கு  28 வயது மட்டுமே. இவர், உயிர் மருத்துவ கழிவுகளை குறிப்பாக ஒற்றை பயன்பாட்டு மாஸ்குகளை, தலையில் போடப்படும் கவசங்கள், பிபிஇ கிட், கையுறைகள் ஆகியவற்றை செங்கற்களாக மறுசுழற்சி செய்து மாற்றுகிறார்.

 மாசு கட்டுப்பாட்டு வாரியம் (Central Pollution Control Board) மூலம் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தியாவில் தினசரி சுமார் 609 மெட்ரிக் டன் சாதாரண  மருத்துவ கழிவுகள் உற்பத்தியாகின்றன. தற்போது கொரோனா பரவலால், இந்தியாவில் COVID-19 தொடர்பான  மருத்துவக் கழிவுகள் ஒரு நாளில் சுமார் 101 மெட்ரிக் டன்  வருகிறது. 

இந்த தரவுகள், கொரோனாவின் தாக்கத்தால் ஏற்படும்  பக்கவிளைவுகளை கோடிட்டு காட்டுவதாக உள்ளது. மறுசுழற்சி  செய்யவில்லை என்றால், சுற்றுச்சூழல் மேலும் விரைவில் அழியக்கூடும்.

பி-பிளாக் 2.0

குப்பைகளாக போடப்படும் பிபிஇ மற்றும் முகக்கவசங்களில் 50 சதவீதம், 3% சதவீதம் பைண்டர்கள் மற்றும் 45% காகித கழிவுகள் சேர்த்து இந்த செங்கற்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த செங்கலில், நீர் போகாது, தீ பற்றாது, மற்றும் பூச்சிகளை எதிர்க்கும் தன்மையும் உள்ளது. 

ஒவ்வொரு செங்கலும் 12 x 8 x 4 அங்குல அளவில் இருக்கும், ஒரு சதுர அடிக்கு 7 கிலோ பயோமெடிக்கல் கழிவு  பயன்படுத்தப்படுகின்றன. இது பி-பிளாக் 1.0 உடன் ஒப்பிடுகையில்  ஒரு செங்கல் உற்பத்திக்கு 2 ரூபாய் 80 பைசா  அடக்க விலை ஆகிறது. 

மேலும் படிக்க:

குப்பைகளை மறுசுழற்சி செய்து, இயற்கை உரம் தயாரிக்கும் புதிய தொழில்நுட்பம்!

விஷமாகும் நீரை மறுசுழற்சி செய்து விவசாயத்தை மேம்படுத்தலாம் எப்படி?

English Summary: The recycling man who turns used masks into bricks Published on: 05 June 2021, 03:40 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.