ராணுவ வீரர்களுக்கான ஊனமுற்றோர் ஓய்வூதியம் வழங்குவதில் சில விதிகளை உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ளது. இதன்படி பாதுகாப்பு பணியின்போது விபத்தில் சிக்கி ஊனமுற்றால் மட்டுமே, ஓய்வூதியம் கிடைக்கும்.
ராணுவ வீரர்களுக்கு ஊனமுற்றோருக்கான ஓய்வூதியம் (disability pension) வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், ராணுவத்தில் சேவையில் இருந்தபோது உடல் ஊனமுற்றால் மட்டுமே பென்சன் வழங்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அரசு மனுத்தாக்கல்
ராணுவ வீரர்களுக்கு ஊனமுற்றோர் பென்சன் வழங்குவதற்கு அனுமதி அளித்து ஏற்கெனவே ராணுவ வீரர்கள் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல் செய்திருந்தது.
விசாரணை
இம்மனு விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு சார்பில் வழக்கறிஞர் கே.எம்.நடராஜ் ஆஜரானார். அப்போது, ராணுவ வீரர்களுக்கு ஊனமுற்றோர் பென்சன் வழங்க வேண்டுமெனில், ராணுவ சேவைக்கும், சம்பந்தப்பட்ட வீரர் ஊனமுற்றதற்கும் தொடர்பிருக்க வேண்டும் என கே.எம்.நடராஜ் வாதிட்டார்.
அவரது வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றது.
20% மேல்
பின்னர், ராணுவ சேவையின்போது ஊனமுற்ற ராணுவ வீரர்களுக்கும், ராணுவ சேவையால் உடல் ஊனம் 20% மேல் மோசமடைந்தவர்களுக்கும் மட்டுமே ஊனமுற்றோர் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஓய்வூதியம் கிடையாது
இதன்படி, ராணுவ சேவை நேரத்தில் அல்லாமல் பொது சாலைகள் போன்ற இடங்களில் விபத்து ஏற்பட்டு ராணுவ வீரர் ஊனமுற்றால் அவருக்கு ஊனமுற்றோர் ஓய்வூதியம் வழங்கப்படாது.
மேலும் படிக்க...
பெண்களுக்கு சூப்பர் வசதி- ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
Share your comments