சொந்தமாக தொழில் தொடங்குவோர், ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்குவோர் போன்ற தொழில்முனைவோருக்கு ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா ஒரு அற்புதமான அறிவுரையை வழங்கியுள்ளார்.
பிர்லா அறிவுரை
தொழில் தொடங்குவோருக்கு ரிஸ்க் எடுக்கும் திறன் மட்டுமல்லாமல், நல்ல வழிகாட்டுதலும் தேவை. அவ்வகையில், முன்னணி தொழிலதிபரும், ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவருமான குமார் மங்கலம் பிர்லா, தொழில் முனைவோருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அதில், தொழில் தொடங்குவோர் உடனடி வெற்றியை எதிர்பார்க்காமல் நீண்டகால பார்வையுடன் தொழில் தொடங்க வேண்டும் என்று குமார் மங்கலம் பிர்லா தெரிவித்துள்ளார். பிட்ஸ் பிலானி பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடியபோது அவர் தனது கருத்துகளையும், அறிவுரையையும் பகிர்ந்துகொண்டார்.
இந்நிகழ்வில் குமார் மங்கலம் பிர்லா பங்கேற்று பேசியபோது, நீண்டகால பார்வையை வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நீண்ட காலத்தில் நீளவாக்கில் வெற்றிகள் கிடைக்கும் என நினைத்துக் கொள்ளுங்கள். லட்சியம் கொண்ட இளைஞர்களுக்கு இது எளிதல்ல. ஆனால், நான் சொல்வதை நம்புங்கள். நீண்டகாலப் பார்வை வைப்பது உதவும். பெரிய வெற்றிகளை அடைவதற்கு நேரமும், பொறுமையும் தேவை என்பதை பெரிய தலைவர்கள் அறிவார்கள்.
மாணவர்கள் எப்போதும் காலத்துக்கு முன்பாக திட்டமிட வேண்டும். அனைவருக்கும் ஆதரவு நிச்சயமாக தேவை. யாருமே தனியாக வெற்றிபெற முடியாது என்று பேசினார்.
வர்த்தகம் மற்றும் தொழில்துறையில் பிர்லாவின் பங்களிப்புக்காக இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷண் விருதை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கடந்த மாதம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
சொந்தமாக தொழில் தொடங்குவோருக்கு ஆனந்த் மஹிந்திராவின் அறிவுரை!
அதிக வட்டி தரும் டிஜிட்டல் FD திட்டம்: இதோ சிறப்பு அம்சங்கள்!
Share your comments