தரமற்ற உணவுகள் மீதான புகார்களை எளிதாகப் பதிவுசெய்வதற்காக FoodSafety.tn.gov.in மற்றும் TN Food Safety Consumer App ஐ தமிழக அரசு அறிமுகப்படுத்துகிறது. இச் சேவையில் விரைவான நடவடிக்கை மற்றும் ரகசியத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு பதிவை தொடருங்கள்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துத் துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர்.ப.செந்தில்குமார், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையர் திரு.லால்வீனா, தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் மரு.ச.உமாஸ மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் மரு.சண்முகக்கனி, உணவு பாதுகாப்புத் துறை இயக்குநர் மற்றும் கூடுதல் ஆணையர் மரு.தேவபார்த்தசாரதி மற்றும் உயர் அலுவலர்களால் 03.05.2023 அன்று சென்னை, ஓமந்தூரர் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில், தரமற்ற கலப்பட உணவுகள் குறித்த பொதுமக்களின் புகார் நடவடிக்கைகளை எளிதாக்கும் விதமாக, விவரங்களை மிக எளிமையாக தேர்ந்தெடுக்கும் வசதிகளுடன் தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்ட உணவு பாதுகாப்புத் துறையின் இணையதளம் மற்றும் நுகர்வோர் குறைதீர்ப்பு கைபேசி செயலியினை அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
இதில் பொதுமக்கள் தங்களது புகார்களை டைப் ஏதும் செய்யாமல் மிகம எளிமையாக விவரங்களை தேர்ந்தெடுக்கும் வசதியுடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளில் உருவாக்கப்பட்ட புதிய இணையதளம் foodsafety.tn.gov.in மற்றும் கைபேசி செயலி TN food safety consumer App பதிவிறக்கம் செய்யும் விதமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஹோட்டல், பேக்கரி உள்ளிட்ட உணவகங்கள் மற்றும் கடைகளில் பொதுமக்களுக்கு தரமான சுகாதாரமான உணவு வகைகள் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் அரசின் உணவு பாதுகாப்புத் துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் தற்போது உணவு தொடர்பான பொதுமக்களின் புகார் நடவடிக்கைகளை எளிதாக்கும் விதமாகவும், விரைவு நடவடிக்கைக்கு ஏதுவாக புதிய இணையதளம் மற்றஉம் செயலியைமக்கள் பயன்படுத்தி கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
இது குறித்து உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் கூறும் போது, தரமற்ற உணவு, கலப்படம் உள்ளிட்ட புகார்கள் குறித்த விவரங்களை பொதுமக்கள் இதற்கான இணையதளம் மூலமும், கைபேசி செயலி மூலமும் தெரிவித்து பயனடையலாம்.
மேலும் புகார்தாரரின் விபரங்கள் ரகசியம் பாதுகாக்கப்படும். புகார் அளித்த 24 முதல் 48 மணி நேரத்திற்குள் ஆய்வு நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட்டு புகார்தாரருக்கு ஆய்வறிக்கை அளிக்கப்படும் என தகவல் தொடர்பு அமைச்சகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்செயலியை பதிவிறக்கம் செய்ய...
இணையதளம் மற்றும் கைபேசி செயலி முகவரி
Android கைபேசி வைத்திருப்போர்: Download செய்ய
iOS கைபேசி வைத்திருப்போர்: Download செய்ய
மேலும் படிக்க:
தேயிலை கண்காட்சி: நீலகிரியின் சிறந்த தேயிலை சுவையை வெளிப்படுத்துதல்
60% அரசு மானியத்துடன் லாபம் தரும் முத்து விவசாயம் செய்யலாம்!
Share your comments