கூட்டுறவு சங்கங்களில் காலியாக இருக்கக் கூடிய இளநிலை ஆய்வாளர், பண்டகக் காப்பாளர் உட்பட உள்ள காலியிடங்களை நிரப்ப TNPSC புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. எத்தனை பணியிடங்கள்?, எவ்வாறு விண்ணப்பிக்கலாம்? முதலான தகவலகளை இப்பதிவு வழங்குகிறது.
காலியாக இருக்கக் கூடிய கூட்டுறவு சங்கங்களின் பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியுள்ளவர்கள் வருகின்ற அக்டோப்பர் 14 ஆம் தேதி வரை tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பெண்களுக்கு ரூ. 6000 கிடைக்கும் மத்திய அரசின் திட்டம்: இன்றே அப்ளை பண்ணுங்க!
மேலும் அக்டோபர் 19 முதல் 21ம் தேதி வரை பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான குரூப் 3 ஏ தேர்வு அடுத்த 2023-ஆம் ஆண்டில் ஜனவரி 28 ஆம் தேதி காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை நடைபெற இருக்கிறது.
வயது வரம்பு எனப் பார்க்கும்போது இளநிலை ஆய்வாளர் பதவிக்கு 18 முதல் 37 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும், பண்டகக் காப்பாளர் பதவிக்கு 18 முதல் 32 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. அதோடு, இட ஒதுக்கீட்டின் படி வயது தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: 50% மானியத்தில் டிராக்டர்! இன்றே அப்ளை செய்யுங்க.!
எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் சான்றிதழ் சரிப்பார்ப்புக்கான விண்ணப்பத்தாரர்களின் தற்காலிகமான பட்டியல் ஒன்று அறிவிக்கப்படும். அதைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்பு, தகுதியானவர்கள் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலிப்பணியிடங்களைக் குறித்து விரிவான தகவலை அறிய https://www.tnpsc.gov.in/English/Notification.aspx என்ற இணைப்பை பயன்படுத்தி அறிவிப்பினை தெரிந்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க
Share your comments