தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அதாவது TNPSC மூலம் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக, எந்த ஒரு அரசு தேர்வுகளும் நடத்தப்படாமல் இருந்தது குறிப்பிடதக்கது. இந்த நிலையில், தற்போது பாதிப்பு குறைந்துள்ளதால் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் TNPSC தேர்வுகளுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக, இந்த தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதை, செய்திகளில் காணப்படுகிறது.
அதனை தடுக்கும் வகையில், எதிர்காலத்தில் தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட்டிற்கு பதில் பயோமெட்ரிக் விரல் ரேகை பதிவு முறையை கொண்டுவர TNPSC திட்டமிட்டுள்ளது குறிப்பிடதக்கது. இது முறைக்கேடு நடப்பதில் இருந்து நம்மை பாதுகாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, தேர்வர்கள் தங்கள் விரல் ரேகை பதிவு செய்தால் அதில் உள்ள தகவலின் படி தேர்வரைக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இதனால் ஆள்மாறாட்டம் தடுக்கப்படும் என்பது குறிப்பிடதக்கது. இதற்கான நடவடிக்கைகள் விரைவில் துவங்க இருப்பதாக TNPSC தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
TNPSC தேர்வுகளுக்கான ஆன்லைன் வழி இலவசப் பயிற்சி:
இந்த செய்தி நிச்சயம், TNPSC தேர்வாளர்களுக்கான நற்செய்தியாகும், இதனால் தகுதியான விண்ணப்பதார்கள் தேர்ச்சிப் பெறுவார்கள் என்பதில், எந்த சந்தேகமும் இல்லை.
கொரோனா தொற்று காரணமாக, நிறுத்தி வைக்கப்பட்ட இணைய வழி பயிற்சி வகுப்புகளைத் தொடர்ந்து நடத்த வேலைவாய்ப்புத்துறை முன்வந்துள்ளது. இதில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும், குரூப் 2 தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தற்போது தொடங்கியுள்ளது.
இலவசப் பயிற்சி (இலவசப் பயிற்சி)
- இணையவழியில் நடத்தப்பட உள்ள இந்த பயிற்சி முற்றிலும் இலவசம். இந்த பயிற்சி வகுப்புகளில் சேர கட்டணம் ஏதுமில்லை.
- வகுப்புகள் தினமும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 2 மணி முதல் 4 மணி வரையிலும் நடத்தப்பட உள்ளன.
மேலும் படிக்க: தமிழகம்: தக்காளி மீண்டும் ரூ. 100க்கு விற்பனை! காய்கறி விலை
பங்கேற்பு (Participation)
இந்த பயிற்சி வகுப்புகளில் CISCO WEBEX இணையப் பக்கத்தின் மூலமாகவோ அல்லது CISCO App மூலமாகவோ கலந்துக் கொள்ளலாம்.
மாதிரித் தேர்வுகள் (Sample selections)
இந்த பயிற்சிகளில், பாடக்குறிப்புகள் வழங்கப்படும். மாதிரி தேர்வுகள் நடத்தப்படும் மற்றும் அரசு அலுவலர்களைக் கொண்டு மாதிரி நேர்முகத் தேர்வுகளும் நடத்தப்படும்.
மேலும் படிக்க: ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்ய RTO-க்கு அதிகாரம் கிடையாது
லிங்க் (Link)
பயிற்சியில் சேர விரும்பும் தேர்வர்கள் இந்த https://tamilnaducareerservices.tn.gov.in/vle/vle_home லிங்கைப் பயன்படுத்தி பதிவு செய்துக் கொள்ளவும்.
மேலும் படிக்க:
State Bank: 2வது முறையாக உயர்ந்த வட்டி விகிதம்! விவரம் உள்ளே!
Share your comments