1. மற்றவை

TNPSC: மே மாதம் குரூப் - 1 தேர்வு நடத்த திட்டம்!

R. Balakrishnan
R. Balakrishnan

TNPSC Group 1

TNPSC குரூப் - 1 தேர்வுகள் மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, என டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலச்சந்திரன் கூறினார். விழுப்புரத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளில், பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கான துறைத் தேர்வு பிப்ரவரி 1ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடக்கிறது.

தேர்வில் புதிய நடைமுறையாக 1 முதல் 3ம் தேதி வரை மற்றும் 7 முதல் 8ம் தேதி வரை கம்ப்யூட்டர் முறையில் ஆன்-லைன் தேர்வு நடத்தப்படுகிறது. மேலும், சர்வே மற்றும் வருவாய்த் துறைகளுக்கு எழுத்துத்தேர்வு வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று 4 முதல் 6ம் தேதி வரை மற்றும் 9ம் தேதிகளில் எழுத்துத் தேர்வும் நடக்கிறது.

விடைத்தாள் திருத்துதல் (Answer sheet correction)

ஓராண்டாக விடைத்தாள் முழுமையாக கணினி மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு, விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது. தேர்வு எழுதுபவர்களுக்கும், விடைத்தாள் திருத்துபவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லாததால், நேர்மையான முறையில் விடைத்தாள் திருத்தப்படுகிறது. மேலும், டி.என்.பி.எஸ்.சி., மூலம் இந்தாண்டு 32 வகை தேர்வுகளை நடத்த திட்டமிட்டு வருகிறது.

ஆதார் கட்டாயம் (Aadhar Must)

குறிப்பாக, குரூப் - 1 தேர்வுகள் மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. குரூப் - 2 மற்றும் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு இம்மாதத்திலேயே வெளியிடப்படும். மேலும், குரூப் - 4 தேர்வு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, அனைத்து போட்டி தேர்வுகளிலும், தமிழ் மொழி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழி தேர்வில், 100 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடைபெறும். இத்தேர்வில் 40 மதிப்பெண் பெற்றவர்கள் அடுத்த கட்ட தேர்விற்கு எடுத்துக் கொள்ளப்படுவர். தேர்வு எழுதுபவர்கள், தேர்வு மையத்திற்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட 30 நிமிடத்திற்கு முன் வர வேண்டும். இனிவரும் காலங்களில் நடைபெறும் போட்டித் தேர்வுகளுக்கு, விண்ணப்பதாரர்களின் ஆதார் எண் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

போட்டித்தேர்வு எழுதுபவர்களில் 60 சதவீதம் பேர், ஆதார் எண்ணை பதிவு செய்துள்ளனர். மீதமுள்ளவர்கள் பிப்ரவரி 28ம் தேதிக்குள் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க

காவல் அதிகாரிக்கே அபராதம் விதித்த காவலர்கள்: பாராட்டிய டிஜிபி!

பசு மாட்டிற்கு வளைகாப்பு: மெய் சிலிர்க்க வைத்த காட்சி!

English Summary: TNPSC: Plan to conduct Group-1 exam in May!

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.