1. பயிர் விளைச்சல் போட்டி, விவசாயிகள் பங்கேற்கலாம்
2. PM Kisan - திட்டத்தின் புதிய அப்டேட்
3. பெண் பயணிகளுக்காக பிங்க் பஸ்!
4. அரசு பேருந்துகளில் பார்சல்களை அனுப்பலாம்: ஆகஸ்ட் 3 முதல் அமலாக்கம்
5. இன்றைய வானிலை அறிக்கை
வேளாண் துறை சார்பில், நெல், மணிலா மற்றும் உளுந்து பயிர் விளைச்சல் போட்டியில் விவசாயிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட வேளாண் இணை இயக்குநர் திரு. சுரேஷ் அறிக்கையில்: திருந்திய நெல் சாகுபடி முறையில் பயிர் செய்த விவசாயிகளுக்கு, மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டி நடத்தப்படுகிறது. பங்கேற்க விரும்பும் விவசாயிகள், தங்கள் பகுதி வேளாண் துறை அலுவலர்களை அணுகி, நிலத்தின் சிட்டா, அடங்கல் ஆகிய ஆவணங்களை அளித்து, நுழைவுக்கட்டணம் 150ரூபாய் செலுத்தி பதிவு செய்ய வேண்டும். கலந்துக்கொண்டு வெற்றி விவசாயிக்கு, ரோக்க பண பரிசும் மற்றும் நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறன் விருதும் வழங்கப்படுகிறது. மாவட்ட அளவில் வெற்றி பெற்றதும், மாநில அளவில் போட்டி நடக்கும் என அவர் குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் உள்ள பொருளாதாரத்தில் நலிவடைந்த விவசாயிகளின் நிதிச்சுமையைக் குறைத்து, அவர்களுக்கு உதவ வேண்டும் என்னும் நோக்கத்தில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியத் திட்டம்தான் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-Kisan) எனப்படும் பிரதமரின் விவசாய நிதியுதவித் திட்டம். அண்மையில் நிறைய முறைகேடுகள் நடப்பது தெரியவந்துள்ளது. எனவே தவறான முறையில் நிதியுதவி பெறுபவர்களைக் கண்டுபிடித்து அவர்களை திட்டத்திலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுப்பட்டுள்ளது. அந்த வகையில் தகுதியற்றவர்களின் பெயர் திட்டத்துக்கான பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு வருகிறது.
சென்னை உள்ளிட்ட நகரங்களில் இயக்கப்படும் சாதாரண பேருந்துகளில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள். திமுக அரசின் இந்தத் திட்டத்திற்கு பெண்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டுக்கு முன்பு வரை மாநகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை 40 சதவீதமாக இருந்தது. அது தற்போது 60 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார். பெண்கள் இலவச பயணம் செய்யும் பேருந்துகளில் முன்பக்க கண்ணாடியில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும். ஆனால் சில பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டப்படாமல் உள்ளது. சில ஸ்டிக்கர்களை தூரத்தில் நின்று படிக்க முடியாத நிலை உள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மாநகர போக்குவரத்து கழகம் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் சாதாரண பேருந்துகளை 'பிங்க்' நிறத்தில் மாற்றியுள்ளது. மாநகர போக்குவரத்து கழகத்தின் இந்த 'பிங்க்' நிற பேருந்துகள் அடுத்த வாரம் சில வழித்தடங்களில் சோதனை ஓட்டத்தை தொடங்குகிறது.
வரும் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் அரசு விரைவ பேருந்துகளில் சுமை பெட்டி வாடகை திட்டத்தின் மூலம் ஒரு ஊரின் பிரசித்தி பெற்ற பொருட்களை பிற ஊர்களுக்கு எடுத்து செல்ல ஏற்பாடு.
இந்நிலையில், பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள் மற்றும் முகவர்கள் தினசரி பொருட்களை இரு ஊர்களுக்கு இடையே அனுப்பி விடும் வகையில், ஒரு மாதம் முழுவதும் பேருந்தில் உள்ள சுமை பெட்டியை மாத வாடகை, தினசரி வாடகை செலுத்தி உபயோகித்துக் கொள்ள இத்திட்டம் ஆகஸ் 3ம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது.
14ஆம் தேதி முக்கிய நிகழ்வுகள்
👉 2015ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைந்தார்.
👉 2004ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி இந்தியத் துறவி சுவாமி கல்யாண் தேவ் மறைந்தார்.
👉 1995ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி எம்பி3 (MP3) பெயரிடப்பட்டது.
👉 1967ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி நாசாவின் சேர்வெயர் 4 ஆளில்லா விண்கலம் ஏவப்பட்டது.
👉 1914ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி அன்னி பெசன்ட் அம்மையார், நியூ இந்தியா என்ற பத்திரிகையை தொடங்கினார்.
இன்றைய வானிலை அறிக்கை
வட தமிழகம், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கர்நாடக கடலோர பகுதிகள், ஆந்திரா கடலோர பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்ககடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேலும் படிக்க:
Breaking: பெட்ரோல், டீசல் விலையில் ரூ.5 குறைப்பு: அரசின் முக்கிய அறிவிப்பு!
தரவரிசையில் இரண்டாம் இடத்தை பிடித்த, விஜய்சேதுபதியின் “கடைசி விவசாயி”!
Share your comments