தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் சார்பில் வணிகமுறையிலான காய்கறி மற்றும் பழப்பொருட்கள் தயாரிப்பு குறித்த 2 நாள் பயிற்சி, அடுத்த மாதம் நடத்தப்பட உள்ளது.
வேளாண் பல்கலைக்கழகம் (Agricultural University)
கோவையில் இயங்கிவரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், வேளாண் அறிவியலை மக்களிடையேக் கொண்டுசெல்வதில், முக்கியப் பங்கு வகித்து வருகிறது. இங்கு மாணவர்கள் வேளாண் கல்வி பயில ஏதுவாக, இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப்படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
விதை ரகங்கள் (Seed varieties)
இதுமட்டுமல்லாமல், விவசாயம் சார்ந்த அனைத்து ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு, அதிக மகசூல் பெற்று கூடுதல் வருமானம் ஈட்ட விவசாயிகளுக்கு விதை ரகங்கள் வழங்கப்படுவதுடன், அவ்வப்போது, பருவநிலைக்கு ஏற்ற ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. மேலும், விவசாயத்திற்குத் தேவையான இயற்கை உரங்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
தொழில் பயிற்சி (Vocational training)
அதேநேரத்தில், தொழிலதிபராக வேண்டும் என நினைப்பவர்களுக்கும் கைகொடுக்கிறது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்.
அது எப்படியென்றால், சுயதொழில் செய்ய விரும்புபவர்களுக்காக அவ்வப்போது பயிற்சிகளை வழங்கி வருவது வழக்கம்.
அதன்படி, அடுத்த மாதம் 7 மற்றும் 8ம் தேதிகளில், வணிகமுறையிலான காய்கறி மற்றும் பழப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பயிற்சி நேரத்தைப் பொருத்தவரை, காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும்.
பயிற்சி (Vocational training)
-
உலர வைக்கப்பட்டக் காய்கறிகள் மற்றும் பழங்கள் (Dehydrated vegetables and fruits)
-
பலவகை பழ ஜாம் (Mixed Fruit Jam)
-
பழரசம் (Squash)
-
தயார் நிலைபானம்Readdy-to-serve beverage)
-
ஊறுகாய்(Pickles)
-
தக்காளி கெட்சப்( Tomato Ketchup)
-
ஊறுகனி (Candy)
-
பழப்பார் (Fruit Bar)
பயிற்சிக் கட்டணம் (Fees)
இந்தப் பயிற்சியில் கலந்துகொண்டுப் பயனடைய விரும்புபவர்கள் ரூ.1,500 +18% GST மட்டும் செலுத்தித் தங்கள் பெயரை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு (For more details)
பேராசிரியர் மற்றும் தலைவர்
அறுவடை பின்சார் தொழில்நுட்பத்துறை
வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயமுத்தூர் - 641003
தொலைபேசி எண் - 0422-6611268/1340
மேலும் படிக்க...
நீங்களும் தொழில் முனைவோராக வாய்ப்பு-பேக்கரிப் பயிற்சி அளிக்கிறது TNAU!
Share your comments