1. மற்றவை

தீராத PF பாஸ்புக் பிரச்சினை- PF பேலன்ஸை காண 3 எளிய வழிமுறைகள் இதோ..

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
3 simple methods to see your PF balance

கடந்த சில வாரங்களாகவே PF பயனர்கள், இணையத்தில் தங்களது பாஸ்புக் பக்கத்தை காண இயலவில்லை என பலர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். EPFO தரப்பில் “சர்வர் பிரச்சினையால் உறுப்பினர்கள் தங்களது பாஸ்புக் வசதியை பெற முடியவில்லை. விரைவில் பிரச்சினை சரி செய்யப்படும். சிரமத்திற்கு வருந்துகிறோம்எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PF பயனர்கள் தங்களது இ-பாஸ்புக் பெற EPFO போர்ட்டலை அணுகும் போது, அவர்களுக்கு கிடைக்கும் பெரும்பாலான பதில்கள் 404 error தான். இன்னும் பலருக்கு URL/MemberPassBook/Login என்கிற சர்வரினை கூட அணுக இயலவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் விரக்தியடைந்த PF பயனர்கள் டிவிட்டரில் EPFO நிறுவனத்தை கடுமையாக சாடி வருகின்றனர். EPFO தரப்பில் சர்வர் பிரச்சினைக்காக வருத்தம் தெரிவித்துள்ள நிலையில், வேறு எந்த வகையில் தங்களது PF புத்தகத்தை காண இயலும் என்பதை இங்கு காணலாம்.

1.UMANG APP

2.SMS

3.MISSED CALL

UMANG செயலி மூலம் EPF பாஸ்புக்கை காணும் முறை:

படி 1: UMANG செயலியை பதிவிறக்கி, உங்கள் கணக்கில் உள்நுழையவும்.

படி 2: தேடல் பட்டியில் 'EPFO' ஐ என்பதை உள்ளீடு செய்யவும்.

படி 3: சேவைகளின் பட்டியலிலிருந்து ‘VIEW பாஸ்புக்என்பதை தேர்ந்தெடுக்கவும்.

படி 4: உங்கள் UAN எண் உள்ளீட்டவும், PF கணக்கில் பதிவாகிய மொபைல் எண்ணிற்கு OTP வரும். அதனை உள்ளீட்டு உங்கள் PF account பக்கத்திற்குள் நுழையவும்

படி 5: 'உறுப்பினர் ஐடி' என்பதைத் தேர்ந்தெடுத்து ePassbook ஐப் பதிவிறக்கவும்.

எஸ்எம்எஸ்  மூலம் PF account balance காணும் முறை:

PF account உடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், மிகச் சமீபத்திய  PF இருப்பு பற்றிய தகவலை உங்களால் பெற இயலும். நீங்கள் பின்வருமாறு SMS அனுப்பவும்: EPFOHO UAN ENG. விரும்பிய மொழியின் முதல் மூன்று எழுத்துக்கள் "ENG" ஆகும். உதாரணத்திற்கு, நீங்கள் தமிழில் விவரங்களை பெற EPFOHO UAN TAM என டைப் செய்யவும். உங்களின் வங்கிக் கணக்கு, ஆதார் மற்றும் பான் எண்ணுடன் உங்கள் UAN இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் அல்லது சமீபத்திய தகவலைப் புதுப்பித்திருக்க வேண்டியது அவசியம்.

MISSED CALL:

MISSED CALL முறையே பயன்படுத்தி EPF இருப்பை  சரிபார்க்கலாம். அதற்கு நீங்கள் PF account உடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 9966044425 என்ற எண்ணிற்கு தருவதன் மூலம், மிகச் சமீபத்திய  PF இருப்பு பற்றிய தகவல் குறுந்தகவலாக கிடைக்கும்.  உங்களின் வங்கிக் கணக்கு, ஆதார் மற்றும் பான் எண்ணுடன் உங்கள் UAN இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் அல்லது சமீபத்திய தகவலைப் புதுப்பித்திருக்க வேண்டியது அவசியம். இந்த சேவைக்கு கட்டணம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

pic courtesy- krishijagran edit

மேலும் காண்க:

ஒரு நாளைக்கு 10,000 STEPS நடந்தால் இவ்வளவு நன்மை இருக்கா?

English Summary: what are the 3 simple methods to see your PF balance Published on: 27 April 2023, 03:36 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.