1. மற்றவை

வரி சேமிப்பு திட்டமிடலை துவக்க சரியான நேரம் எது?

R. Balakrishnan
R. Balakrishnan
Income Tax Saving
Credit : Business India

நிதியாண்டின் துவக்கத்தில் வரி சேமிப்பு திட்டமிடலை மேற்கொள்வதன் அவசியம் மற்றும் இதனால் கிடைக்கக்கூடிய பலன்களை நாம் இப்போது பார்க்கலாம்.

திட்டமிடல்

வருமான வரி தாக்கல் செய்பவர்களில் பலரும், வரி சேமிப்பிற்கான திட்டமிடலை பல்வேறு காரணங்களால் தள்ளிப்போடும் வழக்கம் கொண்டிருக்கின்றனர். வரி சேமிப்பு முதலீட்டை கடைசி நேரத்தில் அவசரமாக மேற்கொள்வதும் பலருக்கு வாடிக்கையாக இருக்கிறது. இவ்வாறு வரி சேமிப்பு முதலீடுகளை தள்ளிப்போடாமல், இதற்கான திட்டமிடலை நிதியாண்டின் துவக்கத்திலேயே செய்வது தான் சரியாக இருக்கும் என, நிதி ஆலோசகர்கள் வலியுறுத்துகின்றனர். இதன் மூலம் தேவையில்லாத பதற்றத்தை தவிர்க்கலாம் என்பதோடு, வரி சேமிப்பின் முழு பலனையும் பெற முடியும். பொதுவாகவே, ஆரம்ப காலத்திலேயே முதலீட்டை (Invest) துவக்குவது அதிக பலன் அளிக்கும் என கருதப்படுகிறது. அதே போலவே, வரி சேமிப்பு முதலீட்டையும் நிதியாண்டின் துவக்கத்தில் மேற்கொள்வது ஏற்றதாக அமைகிறது.

வரி விலக்கு

மாறாக, கடைசி மாதங்களில் முதலீட்டை மேற்கொள்வதாக இருந்தால், அதற்கென நிதி இல்லாமல், சம்பளத்தின் பெரும் பகுதியை செலவிட வேண்டியிருக்கும். வரி விலக்கிற்காக அதிகம் நாடப்படும், 80 ‘சி’ பிரிவின் பலனை பெற, 1.50 லட்சம் ரூபாய் வரையிலான முதலீட்டை மேற்கொள்ளும் அவசியம் இருந்தால், அதற்கான தொகையை திரட்ட வேண்டும். நிதியாண்டின் துவக்கத்தில் திட்டமிடும் போது, வரி சேமிப்பிற்கு தேவைப்படக்கூடிய தொகையை கணக்கிட்டு ஒதுக்கீடு செய்வது சாத்தியம். மேலும், வரி விலக்கிற்கு பொருந்தக்கூடிய மற்ற கழிவுகள் மற்றும் பிடித்தங்களையும் மனதில் கொண்டு, வரி சேமிப்பு முதலீட்டிற்கான தொகையை சரியாக தீர்மானிக்கலாம்.இந்த தொகையை துவக்கத்தில் இருந்து முதலீடு செய்யலாம் என்பதால் சுமை குறையும் என்பதோடு, முன்கூட்டியே முதலீடு செய்வதால் கூடுதல் பலன் பெறலாம்.

உதாரணமாக, வரி சேமிப்பிற்கான இ.எல்.எஸ்.எஸ்., எனும் மியூச்சுவல் பண்ட் (Mutual Fund) வகை முதலீட்டை, எஸ்.ஐ.பி., முறையில் மாதந்தோறும் செலுத்தலாம். முன்னதாக திட்டமிடுவதன் மூலம், ஒருவர் தன் நிதி இலக்குகளுக்கு ஏற்ற சரியான முதலீடுகளையும் தேர்வு செய்யலாம். கடைசி நேரத்தில் முதலீடு செய்யும் போது, அவசரத்தில் தவறான முடிவுகளை மேற்கொள்வதையும் இதன் மூலம் தவிர்க்கலாம்.

துவக்கத்திலேயே திட்டமிடும் போது, கைவசம் உள்ள முதலீட்டு தொகுப்பிற்கு ஏற்பவும் முதலீட்டை மேற்கொள்வது சாத்தியம். சம பங்கு மற்றும் கடன்சார் முதலீடுகளுக்கான விகிதத்தையும் கடைப்பிடிக்கலாம். வரி சேமிப்பு நோக்கில் மட்டும் முதலீடு செய்ய வேண்டிய நிர்ப்பந்தமும் இருக்காது. வரி சேமிப்பிற்காக காப்பீடு (Insurance) திட்டங்களில் முதலீடு செய்வதற்கு பதிலாக, தேவை அடிப்படையில் காப்பீடு பாலிசி பெறவும் இது வழிகாட்டும். தேவையான காப்பீடு பாதுகாப்பையும் இது உறுதி செய்யும்.

வரி சேமிப்பில் அதிகம் அறியப்படும் பிடித்தங்கள் தவிர, பொருந்தக்கூடிய மற்ற பிரிவுகளை பலரும் அறிந்திருப்பதில்லை. சரியாக திட்டமிடும் போது இந்த பிரிவுகளையும் திறம்பட பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணத்திற்கு, என்.பி.எஸ்., திட்டத்தில் இருப்பவர்கள், இத்திட்டம் மூலம் கூடுதலாக, 50 ஆயிரம் ரூபாய் பிடித்தத்தை கோர வாய்ப்பிருப்பதை பயன்படுத்திக் கொள்ளலாம். 

இதே போல, மருத்துவ காப்பீட்டிற்கான வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளலாம். முன்னதாக திட்டமிடுவது, சேமிப்பு மற்றும் முதலீட்டிற்கு தேவையான நிதி ஒழுக்கத்தையும் உண்டாக்கும். முதலீடுகள் நிதி இலக்குகளுக்கு ஏற்ப அமையவும் இது வழிகாட்டும்.

மேலும் படிக்க

அவசர பயன்பாட்டுக்கு பவுடர் வடிவில் கொரோனா மருந்து! மத்திய அரசு ஒப்புதல்

தடுப்பூசியும் செயல் இழக்கலாம்! எச்சரிக்கிறது உலக சுகாதார நிறுவனம்!

English Summary: When is the right time to start tax saving planning? Published on: 11 May 2021, 08:54 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.