1. மற்றவை

ஒரு ரூபாய் நோட்டை ஆன்லைனில் விற்று ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம்!

R. Balakrishnan
R. Balakrishnan
1 Rs. Note

Credit : Samayam

ஒரு ரூபாய் நோட்டைக் கொடுத்து நீங்கள் 45,000 ரூபாய் வரையில் சம்பாதிக்கலாம். இதற்கு எங்கும் அலையத் தேவையில்லை. வீட்டிலிருந்தே பணத்தை அள்ளலாம்.

பழைய நாணயங்களுக்குப் பணம்!

பழைய நாணயங்களைச் (Old coins) சேகரித்து வைக்கும் பொழுதுபோக்கு பலரிடம் இருக்கும். அருங்காட்சியகம் போன்ற இடங்களிலும் பழைய நாணயங்களைச் சேகரித்து வைப்பார்கள். பழைய நாணயங்களைச் சேகரிக்கும் பலருக்கு தக்க சன்மாசன்மும் கிடைக்கிறது. உங்களிடம் பழைய, அரிய நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் இருந்தால் அவற்றை சரியான இடத்தில் நீங்கள் கொடுத்தால், லட்சம் - கோடி வரையில் கூட நீங்கள் சம்பாதிக்க முடியும். இது பொழுதுபோக்கு என்றாலும் அதிர்ஷ்டம் இருந்தால் நீங்கள் கோடீஸ்வரர் ஆகலாம். உங்களிடம் அரிய வகை ரூபாய் நோட்டு இருந்தால் உடனடியாக இதைச் செய்யுங்கள்.

ஒரு ரூபாய் நோட்டு

நீங்கள் பழைய நாணயங்கள், ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து பணம் சம்பாதிக்க வேறு எங்கும் அலையத் தேவையில்லை. ஆன்லைன் வலைதளங்களிலேயே நீங்கள் உங்களிடம் உள்ள நாணயம்/நோட்டுகளைக் கொடுத்து பணம் சம்பாதிக்க முடியும். உங்களிடம் பழைய ஒரு ரூபாய் நோட்டு (Old one rupee note) இருந்தால் அதைக் கொடுத்து ரூ.45,000 வரையில் சம்பாதிக்கலாம். முக்கிய விஷயம் என்னவென்றால் இந்த நோட்டு 1957ஆம் ஆண்டில் அச்சிடப்பட்டு, ஆளுநர் ஹெச்.எம்.படேல் கையெழுத்திட்டதாக இருக்க வேண்டும்.

எங்கே விற்பனை செய்வது?

இந்த நோட்டை ஆன்லைன் வலைத்தளங்களில் நீங்கள் ஏலம் விடலாம். இதற்கான ஏலத்தை நடத்தும் பிரத்தியேகமான ஆன்லைன் வலைதளங்கள் உள்ளன. coinbazzar வெப்சைட்டில் நீங்கள் இந்த ரூபாய் நோட்டு விற்பனை செய்து பணம் சம்பாதிக்கலாம். இந்த வலைதளத்தில் நீங்கள் பதிவு செய்து, ரூபாய் நோட்டின் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்தால் நீங்கள் பெரிய தொகையை சம்பாதிக்க முடியும். உங்களது ரூபாய் நோட்டை வாங்க விரும்புவோரிடம் ஏல அடிப்படையில் பணத்தை உயர்த்தி வாங்கவும் முடியும்.

இந்த நாணயங்கள் இருக்கா?

உங்களிடம் பழைய 25 பைசா நாணயம், பழைய ஒரு ரூபாய், 2 ரூபாய் நாணயங்கள் இருந்தாலும் அதை வைத்து நீங்கள் பெரிய தொகையை சம்பாதிக்க முடியும். அதற்கான வலைதளங்கள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதில் நீங்கள் விற்பனை செய்யலாம்.

  1. https://dir.indiamart.com/impcat/old-coins.html
  2. https://in.pinterest.com/080841052o/sell-old-coins/
  3. http://www.indiancurrencies.com/

மேலும் படிக்க

25 பைசா நாணயம் இருக்கா? நீங்களும் லட்சாதிபதி ஆகலாம்!

நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்! ஒரு ரூபாய் நாணயத்துக்கு ரூ.10 கோடி கிடைக்கும்!

English Summary: You can sell a rupee note online and earn thousands

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.