1. மற்றவை

PF வட்டி எப்போது கிடைக்கும்? முக்கிய தகவல் வெளியீடு!

R. Balakrishnan
R. Balakrishnan
PF Interest

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. உண்மையில், PF சேமிப்புப் பணத்துக்கான வட்டி இன்னும் பயனாளிகளின் கணக்கிற்கு வரவில்லை என்ற கவலையில் பிஎஃப் கணக்குதாரர்கள் உள்ளனர். இந்நிலையில், ஒரு PF சந்தாதாரர் EPFO -ஐ ட்விட்டரில் டேக் செய்து கேள்வி கேட்டுள்ளார். இதற்கு EPFO தனது பதிலை அளித்துள்ளது.

PF பயனர் கேள்வி (PF User Question)

நிகும்ப் என்ற ட்விட்டர் பயனர் ஒருவர் EPFO, நிதி அமைச்சகம் மற்றும் PMO கணக்குகளை டேக் செய்து. ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், '2021-22ஆம் ஆண்டு பங்களிப்புக்கான வட்டியை EPFO இன்னும் செலுத்தவில்லை. இப்படி கொள்ளையடிப்பதை நிறுத்திவிட்டு மக்களுக்கு அவர்களின் பணத்தை கொடுங்கள். எதிர்க்கட்சிகள் கூட இதைப் பற்றி மௌனம் காப்பது வருத்தமளிக்கிறது. டிசம்பர் மாதமே வந்துவிட்டது. உங்களால் வட்டிப் பணத்தைக் கொடுக்க முடியவில்லை என்றால், தொழிலாளர் வர்க்கத்திடம் பணம் எடுப்பதை நிறுத்துங்கள்” என்று கோபத்துடன் பதிவிட்டுள்ளார்.

இந்த ட்விட்டர் பயனரின் ட்வீட்டுக்கு EPFO தனது பதிலை அளித்துள்ளது. EPFO தனது பதிலில், 'அன்புள்ள உறுப்பினரே, வட்டியை டெபாசிட் செய்யும் செயல்முறை நடந்து வருகிறது. அது விரைவில் உங்கள் கணக்கில் வந்து சேரும். வரவு வைக்கப்படும் போது வட்டி முழுமையாக வழங்கப்படும். வட்டி இழப்பு எதுவும் ஏற்படாது” என்று தெரிவித்துள்ளது.

PF வட்டி (PF Interest)

ஒவ்வொரு ஆண்டும் பிஎஃப் சேமிப்புக்கான வட்டித் தொகை அரசு தரப்பிலிருந்து பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. பிஎஃப் உறுப்பினர்களின் வங்கிக் கணக்கில் இந்தப் பணம் டெபாசிட் செய்யப்படுகிறது. உதாரணமாக, உங்களுடைய பிஎஃப் கணக்கில் ரூ.10 லட்சம் சேமிப்புப் பணம் இருந்தால் அதற்கு வட்டியாக ரூ.80,000 கிடைக்கும்.

மேலும் படிக்க

பென்சனர்களுக்கு சிறப்பு சேவை: சாதித்த தபால் துறை!

1000 ரூபாய் முதலீடு போதும்: ஒரே ஆண்டில் 50% லாபம் கிடைக்கும்!

English Summary: When will PF interest be available? Important Information Release! Published on: 08 December 2022, 03:16 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.