ஒரு நாட்டில் உள்ள தங்கம் கையிருப்பு, அந்நாட்டின் சொத்துகள் மற்றும் நிதிநிலையை தீர்மானிக்கும் முக்கிய காரணியாகும். பொதுவாக பெரும்பாலான நாடுகளின் தங்கம் அவர்களின் மத்திய வங்கியிடமே இருக்கும்.
போர் சூழல், அரசியல் பதற்றம், பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் ஆகிய சவால்களையும் தாண்டும் பாதுகாப்பான முதலீடு தங்கம். இந்நிலையில், உலகளவில் அதிக தங்கம் வைத்திருக்கும் டாப் 10 நாடுகளை பற்றி பார்க்கலாம்.
அமெரிக்கா (America)
தங்கம் கையிருப்பில் உலகளவில் அதிக தங்கத்துடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவிடம் 8133 டன் தங்கம் உள்ளது.
தங்கம் வைத்திருக்கும் நாடுகளின் வரிசையைக் காண்போம்.
- ஜெர்மனியிடம் 3359 டன் தங்கம் உள்ளது.
- பிரான்ஸிடம் 2,436 டன் தங்கம் உள்ளது.
- இத்தாலியிடம் 2451 டன் தங்கம் உள்ளது.
- இரஷ்யாவிடம் 2298.53 டன் தங்கம் உள்ளது.
- சீனாவிடம் 1948 டன் தங்கம் உள்ளது.
- சுவிட்சர்லாந்திடம் 1040 டன் தங்கம் உள்ளது.
- ஜப்பானிடம் 845 டன் தங்கம் உள்ளது.
- இந்தியாவிடம் 743.83 டன் தங்கம் உள்ளது.
- நெதர்லாந்திடம் 612 டன் தங்கம் இருப்பு உள்ளது.
மேலும் படிக்க
உலக சைக்கிள் தினம்: சிறுவயது நண்பனாய் பெருந்துணையாய் சைக்கிள்!
Share your comments