1. மற்றவை

பள்ளிக்கு 1 இலட்சம் நன்கொடை அளித்த பெண் வியாபாரி: பிரதமர் மோடி பாராட்டு!

R. Balakrishnan
R. Balakrishnan
Woman trader donates Rs 1 lakh to school

திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த ஏழை பெண் இளநீர் வியாபாரி, தனது குழந்தைகள் படிக்கும் பஞ்சாயத்து யூனியன் பள்ளிக்கு, தனது சேமிப்பில் இருந்து ரூ.1 லட்சம் நன்கொடை அளித்துள்ளார். இதனை செய்வதற்கு மிகப்பெரிய மனதும், சேவை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணமும் தேவை'' என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று ரேடியோ வாயிலாக மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) உரையாற்றி வருகிறார்.

உடுமலை பெண் (Udumalai Woman)

கல்வி குறித்த விழிப்புணர்வு சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழகத்தின், திருப்பூர் மாவட்டம் உடுமலையில் வசிக்கும் தாயம்மாள் என்ற பெண் செயல் நமக்கு முன்மாதிரியாக உள்ளது. அவருக்கு சொந்தமாக எந்த நிலமும் இல்லை. பல ஆண்டுகளாக, இளநீர் விற்றே அவரது குடும்பம் வாழ்ந்து வருகிறது. அவரது நிதிநிலையும் சிறப்பானதாக இல்லை. ஆனால், தனது மகள் மற்றும் மகனுக்கு கல்வி கிடைக்க செய்வதில் எந்த ஒரு வாய்ப்பையும் தாயம்மாள் தவறவிடவில்லை. அவரது குழந்தைகள் சின்னவீரம்பட்டி பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர்.

ஒரு நாள் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பின் போது, பள்ளி மற்றும் வகுப்பறையின் தரம் உயர்த்தப்பட வேண்டும் எனக்கூறப்பட்டது. பள்ளியின் உள்கட்டமைப்பையும் கவனிக்க வேண்டும் என்றனர். அந்த கூட்டத்தில் தாயம்மாளும் கலந்து கொண்டார். அனைத்தையும் கேட்டார். ஆனால், பணிகளை மேற்கொள்வதற்கு தேவைப்படும் பணம் குறித்த பிரச்னை காரணமாக பேச்சுவார்த்தை தடைபட்டது. இதன் பிறகு, தாயம்மாள் செய்த செயலை யாரும் நினைத்து பார்த்திருக்க கூட மாட்டார்கள்.

பெரிய மனது

இளநீர் விற்றதன் மூலம் கிடைத்த ரூ.1 லட்சத்தை பள்ளிக்கு நன்கொடையாக தாயம்மாள் அளித்தார். இதனை செய்வதற்கு மிகப்பெரிய மனதும், மிகப்பெரிய சேவை செய்ய வேண்டும் என்ற மனதும் தேவை. தற்போது பள்ளியில் 8 ம் வகுப்பு வரை வகுப்புகள் எடுக்கப்படுவதாக கூறும் தாயம்மாள், பள்ளியின் உள்கட்டமைப்பு தரம் உயர்த்தப்பட்டால் 12ம் வகுப்பு வரை பாடங்கள் நடத்தப்படும் எனக்கூறியுள்ளார். நமது நாட்டில் கல்வி குறித்து பேசிய அதே உணர்வு தான் இதுவும்.

மேலும் படிக்க

கார் வாங்க வந்த விவசாயி: ஏளனம் செய்து விட்டு மன்னிப்பு கேட்ட ஊழியர்!

நீட் தேர்வில் வெற்றி பெற்ற 61 வயது ஆசிரியர்!

English Summary: Woman trader donates Rs 1 lakh to school: PM praises Modi Published on: 30 January 2022, 03:56 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.