ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கில் உள்ள தொகைக்கு EPFO ஆணையம் ஆனது வழங்க உள்ள வட்டி விகிதம் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
வட்டி விகிதம் (Interest Rate)
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கில் ஊழியர்கள் தங்களது ஊதியத்தில் மாதம் 12.5% தொகையை அளிக்க வேண்டும். இதேபோல், ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனத்தின் சார்பில் அதே அளவிலான தொகை ஊழியர் கணக்கிற்கு அளிக்கப்பட வேண்டும். இந்த தொகைக்கு ஆண்டுதோறும் EPFO அமைப்பானது குறிப்பிட்ட அளவிற்கு வட்டி வழங்குகிறது. இந்த வட்டி தொகையானது நேரடியாக ஊழியர்களின் PF கணக்கில் செலுத்தப்பட்டு விடும்.
இந்நிலையில், 2022ம் நிதியாண்டிற்கான வைப்பு தொகைக்கு வட்டி விகிதம் அளிக்கப்படுவது குறித்து ஆலோசனை நடந்து வந்த நிலையில், 8.1% வட்டி அளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த வட்டி தொகையானது நேரடியாக ஊழியர்களின் கணக்கில் விரைவில் செலுத்தப்பட உள்ளதாகவும், அவ்வாறு செலுத்தப்படும் பட்சத்தில், ரூ.1 லட்சம் கணக்கில் வைத்திருக்கும் நபருக்கு ரூ. 8,100 வட்டியும், ரூ.10 லட்சம் கணக்கில் வைத்திருக்கும் நபருக்கு ரூ.81,000 ம் வட்டியாக கிடைக்கும் என்றும் தெரிகிறது.
மேலும் படிக்க
பான் - ஆதார் இணைப்பு: வெளிவந்தது முக்கிய எச்சரிக்கை!
பெண்களுக்கு ஏற்ற சிறப்பான சேமிப்புத் திட்டம்: வெறும் 500 ரூபாயில்!
Share your comments