அசாம் மாநிலம் ஜோனையில் உள்ள மைதாங் சாப்ரியைச் சேர்ந்த டிம்பேஸ்வர் ஒரு முற்போக்கான விவசாயி. டிராகன் பழ சாகுபடியில் யூடியூப் பார்த்து களமிறங்கிய நிலையில், இன்று அசாம் மாநிலத்தில் டிராகன் பழ சாகுபடியில் பல விவசாயிகளுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறார் டிம்பேஸ்வர்.
சிறுவயதில் இருந்தே விவசாயத்தில் ஆர்வம் கொண்ட டிம்பேஸ்வரிடம், பள்ளிக்காலத்தில் ”நீ என்னவாக விரும்புகிறாய்?” என்று ஆசிரியர் கேட்டதற்கு, “நான் விவசாயம் செய்வேன்” என பதிலளித்துள்ளார். அதன்படியே அவர் வளர்ந்த பிறகு, விவசாயத்தை தனது முதற்தொழிலாக மேற்கொண்டு வருகிறார்.
10 பிகாஸ் நிலத்தில் டிராகன் பழம்:
டிம்பேஸ்வர் ஸ்வர்கியாரி விவசாய குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர். ஆரம்பத்தில் தந்தையுடன் இணைந்து பாரம்பரிய முறைப்படி விவசாயம் செய்து வந்துள்ளார். அதன் பின்னர் அவர், தற்போதைய நவீன வேளாண் தொழில்நுட்பங்களை தனது விவசாய பணிகளில் உட்புகுத்தி குறைவான செலவில் நல்ல லாபம் பார்த்து வருகிறார்.
தற்போது 10 பிகாஸ் நிலத்தில் டிராகன் பழத்தை பயிரிட்டுள்ளார். யூடியூப்பினை பார்த்து டிராகன் பழ சாகுபடியினை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளார். ஆரம்பத்தில் நினைத்தது போல் அவ்வளவு எளிதாக அமையவில்லை, டிராகன் பழ சாகுபடி. ஏனென்றால், டிராகன் பழத்தை சாகுபடி செய்வதற்கு அதிக அளவு மூலதனம் தேவைப்படுகிறது.
முதலீட்டு செலவு 3 லட்சம்:
அதுவும் குறிப்பாக அஸ்ஸாமிய மண்ணில் டிராகன் பழத்தை வளர்ப்பதில் நீங்கள் எவ்வளவு வெற்றி பெறுவீர்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. பெரிய சவால்களுக்கு மத்தியில் ரூ.3 லட்சம் முதலீட்டு செலவில் டிராகன் பழ சாகுபடியை தொடங்கினார்.
இன்று தனது முதலீட்டு பணத்தை எடுக்குமளவிற்கு லாபம் பார்க்கத் தொடங்கியுள்ளார். ஒரு டிராகன் 30-35 வருடங்கள் பழம் தரும். நட்ட நாள் முதல் 5 ஆண்டுகளுக்கு பின்னரே ஒரு டிராகன் மரம் முதிர்ச்சியடைந்து பழம் கொடுக்கத் தொடங்குகிறது.
சமீபத்தில் விவசாயி டிம்பேஸ்வர் ஸ்வர்ஜியாரி, கேரட், மிளகு, ஸ்ட்ராபெர்ரி மற்றும் மாதுளை, சச்சி போன்ற மதிப்புமிக்க மரங்களின் நாற்றுகளை ஊடுபயிராக பயிரிட்டுள்ளார். இவை தவிர, தேமாஜி மாவட்ட வேளாண் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட விதைகள் மூலம் 3 பிகா நிலத்தில் கடலை பயிரிட்டுள்ளார். தேமாஜி மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலைய அதிகாரிகள், சமீபத்தில் டிம்பேஸ்வர் பண்ணைக்கு சென்றிருந்தபோது இவரது விவசாய பணியினை கண்டு ஈர்க்கப்பட்டுள்ளனர்.
டிம்பேஸ்வரின் செயல்பாடுகளை தெரிந்துக்கொள்ளும் வகையில் அவருடன் கிரிஷி ஜாக்ரன் நிருபர் பங்கஜ் கனிகர் நேர்க்காணல் மேற்கொண்டார். அதில், ” உண்மை தான். நான் முதலில் யூடியூப் பார்த்து தான் டிராகன் பழ சாகுபடியினை மேற்கொண்டேன். தற்போது எனது சொந்த அனுபவத்தின் மூலம் விவசாய பணியைத் தொடர்ந்து வருகிறேன். எந்தெந்த நாற்றுகளை எங்கு, எப்படி நடுவது என்று எனக்கு இப்போது தெரியும். சமீபத்தில் எனது பண்ணையினை பார்வையிட்ட மாவட்ட வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானிகள் எனது தவறுகளை சுட்டிக்காட்சி சில யோசனைகளை வழங்கியுள்ளார்கள். அதனைப் பின்பற்றி நல்ல முறையில் தற்போது சாகுபடி மேற்கொண்டு வருகிறேன் என்றார்.
Dragon Fruit Farming interview
Read more:
பாரம்பரிய மீன்பிடித் திருவிழா பின்னாடி இவ்வளவு காரணம் இருக்கா?
ஒரு வாரத்திற்கு பல மாவட்டங்களில் கனமழை- பொதுமக்களை அலர்ட் செய்த IMD
Share your comments