1. வெற்றிக் கதைகள்

மரச்செக்கு எண்ணெய்த் தயாரிப்பில் அசத்தல் லாபம் பெரும் விவசாயி செல்வம்!

KJ Staff
KJ Staff
Credit : Dinamalar

இயற்கை முறையைப் பின்பற்றி தயாரிக்கப்படும் அனைத்துமே மக்களிடையே அமோக வரவேற்பை பெறுவது உறுதி. அந்த வகையில், நாட்டு மரச்செக்கு எண்ணெய்த் தயாரிப்பில் சிலர் கால்தடம் பதித்து சத்தமில்லாமல் வளர்ந்து வருகின்றனர். கடைகளில் கிடைக்கும் எண்ணெயை விட மரச்செக்கு எண்ணெய் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

பாரம்பரிய விவசாயம்:

சாயக்கழிவால் அழிந்த நொய்யல் ஆற்றால், விவசாயம் அழிந்த நிலையில், நாட்டு மரச்செக்கு எண்ணெய் (Wood oil) உற்பத்தியால் மீண்டு எழுந்துள்ளார்கள் கரூர் மாவட்டம் விவசாயிகள். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி செல்வம், பாரம்பரியமாக விவசாயம் செய்து வருகிறார். 10 ஏக்கர் நிலத்தில், நொய்யல் ஆற்று பாசன நீரில் அருமையான விளைச்சலை எடுத்தார். இங்கு பயிரிடப்படும் கரும்பு நல்ல திரட்சியாக, சர்க்கரை சத்து அதிகமாக இருக்கும். பள்ளி படிப்பை முடித்ததும், 18 வயதிலேயே விவசாயம் பார்க்க வந்துவிட்டார். நல்ல வளமான மண் என்பதால், கரும்பையும், நெல்லையும் மாறி, மாறி விளைவித்து இலாபம் கண்டவர். இப்படியே இருந்த நிலையில், 15 ஆண்டுகளுக்கு முன், நொய்யல் ஆற்றில், சாயப்பட்டறை கழிவுகள் கலந்து, அந்த கழிவு நீர், விவசாய நிலத்தில் ஏறி, விவசாயம் தீர்ந்து போய் விட்டது. பலர் மாற்று விவசாயத்துக்கு மாறினார்கள். ஆனால் இவர் மட்டும் தென்னை மரக்கன்றுகளை வளர்த்து வந்தார். அதுவும் பட்டு போனது.

மரச்செக்கு எண்ணெய்

மகனின் யோசனையால், செக்கு போட ஏற்பாடு செய்து, புதிதாக செக்கு அடிக்க முடியாது என்பதால், பழைய செக்கு கல்லை தேடி அலைந்து, நாமக்கல் பக்கம் இந்த செக்கை கண்டுபிடித்து, 30 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கி வந்து, அதன் மீது ஆட, உலக்கையை புதிதாக செய்தார். இயந்திரத்தை (Machine) வைத்து ஆட்டி எடுக்கும் எண்ணெய், சூடாகி விடும். அதனால், மாட்டை வைத்து ஓட்டி எடுக்கும் எண்ணெய் தான் நல்ல சுவை, மணத்துடன் இருக்கும் என்பதால், அனைத்தையும் செய்து முடிக்க, 6 - 7 லட்ச ரூபாய் செலவு செய்து, பாரம்பரிய முறைப்படி எண்ணெய் ஆட்டி, நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் (Coconut Oil) பிழிந்து எடுத்தார்.

துவக்கத்தில் எங்கள் எண்ணெயை யாரும் கண்டுகொள்ளவில்லை. இயற்கை ஆர்வலர்கள், விவசாயிகளுக்கு விற்று, அவர்கள் மூலம், கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் எண்ணெய் விற்பனைக்கு வந்தது. இப்போது, லண்டன், வளைகுடா நாடுகள் என, பல இடங்களுக்கும் ஏற்றுமதி (Export) செய்கிறோம்.
முழுதும் மாடு ஓட்டி, நிதானமாக பிழிந்து, வெயிலில் வைத்து, பதமாக தயாரிக்கப்படும் தரமான எண்ணெய் தான். இதற்காக, தமிழக அரசிடம் சான்றிதழ் (Certificate) பெற்றுள்ளோம். சாயப்பட்டறை கழிவுகளால் அழிந்த விவசாயத்திற்கு மாற்றாக, மகன் கொடுத்த யோசனையில், இப்போது தலை நிமிர்ந்து நிற்கிறார் விவசாயி செல்வம்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

வெள்ளத்திலும் தாக்குப்பிடித்த மாப்பிள்ளை சம்பா! இயற்கை விவசாயிக்கு குவியும் பாராட்டு!

English Summary: Extraordinary profit in wood oil production Great farmer wealth! Published on: 28 January 2021, 07:20 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.