1. வெற்றிக் கதைகள்

மண்புழு உரம் தயாரித்து, ஆண்டுக்கு 5 லட்சம் சம்பாதிக்க முடியுமா?

T. Vigneshwaran
T. Vigneshwaran
Is it possible to make earthworm compost and earn Rs 5 lakh per annum?

விவசாயத்தில் கண்மூடித்தனமான ரசாயனங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, விவசாயிகள் தற்போது இயற்கை விவசாயத்தை நோக்கி நகர தொடங்கியுள்ளனர். அதில் மண்புழு உரத்தின் பயன்பாடு, இயற்கை விவசாயத்தில் மிகவும் பிரபலமான ஒன்றாகும், ஏனெனில் இந்த முறை பின்பற்ற எளிதானது மற்றும் மகசூலும் அதிகமாக உள்ளது. இதுவே மக்கள் இதை அதிகம் விரும்பும் காரணம். அதிகரித்து வரும் மண்புழு உரம் தேவை, விவசாயிகளுக்கு வருமானத்தை அதிகரிக்க உதவியுள்ளது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த பெண் விவசாயி ஒருவர் இந்தத் தொழிலில் மூலம் ஆண்டுதோறும் 5 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறாராம். வாருங்கள் பார்ப்போம்.

மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் வசிப்பவர் எம். ரூபாலி விஜய்மாலி. அவர் ஒரு முற்போக்கான பெண் விவசாயி மற்றும் மண்புழு உரம் வியாபாரத்திலும் வெற்றி கண்டுள்ளார். சமூகவியலில் முதுகலைப் பட்டம் பெற்ற விஜய்மாலி, கடந்த 12 ஆண்டுகளாக இப்பணியில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு நிரந்தர வாடிக்கையாளர்கள் உள்ளனர், விஜயமாலி அவர்களுக்கு வெர்மி கம்போஸ்ட்டை சப்ளை செய்து வருகிறார்.

கிருஷி விக்யான் கேந்திராவிலிருந்து பெறப்பட்ட உதவி(Assistance from Krishi Vigyan Kendra)

டிடி கிசான் அறிக்கையின்படி, விஜயமாலிக்கு 2.5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதில் அவர், விவசாயத்துடன், இயற்கை உரம் தயாரிக்கும் பணியையும் செய்கிறார். விஜயமாலி கரிம உரக் கலாச்சாரத்தையும், அதன் வணிகத்தையும் காதி கிராமத் தொழில் கழகத்தால் ஜில்லா பரிஷத்தின் உதவியுடன் தொடங்கினார்.

கொலாப்பூரில் உள்ள க்ரிஷி விக்யான் கேந்திராவில் இருந்து வர்மா கம்போஸ்ட்டின் அறிவியல் முறைகள் பற்றிய தகவல்களையும் பயிற்சியையும் பெற்றார். ஆரம்பத்தில், அவர் தனது பண்ணையில் மட்டுமே இயற்கை உரம் சப்ளை செய்தார். முதலில் விஜயமாலி தனக்கென மட்டும் மண்புழு உரம் தயாரித்து வந்தார்.  பின்னர் இதன், உற்பத்தி அதிகரித்ததால் விற்பனை செய்யத் தொடங்கினர்.

விரைவில், விஜயமாலியின் மண்புழு உரம் வாங்கும், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது. நல்ல உற்பத்தியால் ஊக்கம் பெற்ற விஜயமாலி, சமர்த் அக்ரோ புராடக்ட்ஸ் என்ற பெயரில், தனது சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார்.

5 லட்சம் வரை சம்பாதிக்கிறார், விஜயமாலி(Earns up to Rs 5 lakh, Vijayamali)

தற்போது, விஜயமாலி ஆண்டுக்கு, 35 முதல் 40 டன் மண்புழு உரம் உற்பத்தி செய்து, ஒரு கிலோ, 12 ரூபாய்க்கென விற்கிறார். இவ்வாறு, வர்மா கம்போஸ்ட் மூலம் விஜய்மாலி ஆண்டுதோறும் ரூ.5 லட்சம் சம்பாதிக்கிறார்.

மஹாராஷ்டிராவின் புனே, கோவாவைத் தவிர கர்நாடகா மாநிலத்திலும் மண்புழு உரத்திற்கான தேவை உள்ளது. விஜயமாலி தனது பண்ணையில் 6 பெண் விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பைக் கொடுத்துள்ளார், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேற இங்கு வேலை செய்கிறார்கள்.

கிராமத்தைச் சேர்ந்த பல விவசாயிகள் விஜய்மாலியின் பண்ணையுடன் தொடர்புடையவர்கள், அவர்கள் தங்கள் வருமானத்தைப் பெருக்கி தன்னிறைவு பெறுவதற்கான நற்பண்புகளைக் கற்றுக்கொள்கிறார்கள். அதே சமயம் இங்கு பணிபுரியும் பெண்களும், கிராமம் மற்றும் அப்பகுதி பெண் விவசாயிகளும் விஜய்மாலியின் சாதனையை முன்மாதிரியாகக் கொண்டு, அவ்வப்போது அவரது பண்ணைக்குச் சென்று, குறிப்பிட்ட விவரங்களைப் அறிந்து, ஏதாவது ஒன்றை சாதிக்க நினைக்கிறார்கள்.

மேலும் படிக்க:

வரப்பை உயர்த்தி மழைநீரைப் பாதுகாக்கும் இயற்கை விவசாயி!

சொட்டுநீரில் சேப்பங்கிழங்கு சாகுபடி செய்து லாபம் பெறும் மதுரை விவசாயி!

English Summary: Is it possible to make earthworm compost and earn Rs 5 lakh per annum?

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2022 Krishi Jagran Media Group. All Rights Reserved.