விவசாயத்தில் வருமானம் இல்லை என்று பலர் இத்தொழிலை புறக்கணித்து விட்டு நகரங்களில் வேலை தேடி செல்லும் இந்த காலக்கட்டத்தில், தனது MCA படிப்பை வைத்துக்கொண்டு, கடந்த 13 ஆண்டுகளாக மலர் சாகுபடியில் ஈடுப்பட்டு வரும் கணினி பட்டதாரி விவசாயி பாலசிவபிரசாத், கிருஷி ஜாக்ரன் ஃபேஸ் புக் பக்கத்தில் மூலம் தனது விவசாய அனுபவங்களை பகிர்ந்துள்ளார்
விவசாயமே அடையாளம் (Farmer the Brand)
விவசாய பொருட்களை விளைவிக்கும் விவசாயியே, அந்த பொருட்களுக்கான முதலாலியாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் கிருஷி ஜாக்ரன் ஒரு புதிய முயற்சியாக "Farmer the Brand" என்ற நிகழ்சியை முன்னெடுத்துள்ளது. ஞாயிறு தோறும் காலை 11.00 மணிக்கு https://www.facebook.com/krishijagrantamilnadu/ ஃபேஸ் புக் பக்கத்தில் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற இருக்கிறது. வாரம் ஒரு விவசாயி பங்குகொண்டு அனுபவங்களை பகிர்ந்துகொள்ள இருக்கிறார்.
மலர் விவசாயி
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை சேர்ந்த மலர் விவசாயி பாலசிவபிரசாத் MCA பட்டம் பெற்றவர். அரம்ப காலத்தில் திறந்த வெளியில் தனது மலர் சாகுபடி பயனத்தை தொடங்கினார். பின்னர் வங்கி கடன் மூலமும், தமிழக அரசின் மானியம் மூலமும் பசுமை குடில் அமைத்து மலர் சாகுபடி செய்து வருகிறார்.
உள்ளுர் சந்தைகளில் ரோஜா மலர் விற்பனையை தொடங்கிய பால சிவபிரசாத், பின் வெளிமாநிலம், வெளி நாடு என கடல் கடந்து தனது வியாபாரத்தை விரிவுப்படுத்தியுள்ளார்.
மலர்கள் பராமரிப்பு!
நான்கரை ஏக்கர் நிலத்தில் பசுமைக் குடில் அமைத்து, ரோஜா(Rose), ஜெஃப்ரா (Gerbra), கார்னேஷன்ஸ் (carnations), ஜிப்சோபோலியா (gypsopholiya) போன்ற மலர்களின் 14 ரகங்களை விதைத்து உற்பத்தி செய்து வருகிறார். மலர்களின் தரம் மற்றும் செழிப்பாக வளர 50 சதவீதம் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், மலர்கள் வாடமல் இருக்க சுற்றுச்சூழலை போதுமான அளவிற்கு குளுமையாக வைத்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார். மண் மேலாண்மையை கடைபிடித்து மலர்களுக்கு நோய் தாக்காமல் பார்த்துக்கொண்டால் அதிக நஷ்டத்திலிருந்து தப்பிக்கலாம் என்கிறார் பாலசிவபிரசாத்.
மலரின் தரம்!
இந்த துறையில் பாலசிவபிரசாத் தாரக மந்திரமாக எடுத்துக்கொண்டது ''தரம்'' மட்டுமே. மலர்களை, தேவை அறிந்து உற்பத்தி செய்வதும், அதனை வியபாரத்திற்கு கொண்டு வரும் போது தேவை அறிந்து தரம் பிரிப்பதும் என இரண்டை குறிப்பிடுகிறார். மேலும், மலர்களை மலராகவே பாவிக்க வேண்டும் என்றும், அதை உற்பத்தி செய்யும் தொழிலாளர்களையும் அவ்வண்ணமே நடத்த வேண்டும் என்றும் தெரிவிக்கிறார்.
வியாபார மந்திரம்!
வாடிக்கையாளர்களின் தேவை அறிந்து விற்பனை செய்வதே வியாபாரத்தின் முதற்படி என குறிப்பிடும் பால சிவபிராசத், வாடிக்கையாளர்களின் ரசனைக் கேற்ப மலர்களை மொட்டாகவும், விரிந்த மலராகவும், நீண்ட காம்புகளுடனும் அழகழகாக கட்டமைத்து விற்பனை செய்து வருகிறார். மேலும், உள்ளூர் நிகழ்ச்சிகள், விற்பனையாளர்கள், வெளிநாடு ஏற்றுமதி என என்ன வகையான தேவைக்கு என்பதை அறிந்து மலர்களை முறையாக தரம் பரித்தும் அதற்கேற்ப மலர்சாகுபடியும் செய்து வருகிறார்.
புதிதாக தொடங்குவோருக்கு...
இந்த மலர் விவசாயத்தில் புதிதாக தொடங்குவோருக்கு பாலசிவபிரசாத் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
-
மலர் விவசாய குடில் அமைக்க ஏற்ற இடம் கடல் மட்டத்திலிருந்து 800 மீட்டர் உயரத்தில் இருக்க வேண்டும்
-
குறைந்தது ஒரு ஏக்கர் நிலம் இருக்க வேண்டும்.
-
தமிழக தோட்டக்கலைத்துறை மற்றும் கோவை வேளாண் பல்கலைக்கழக்கதில் அலோசனை பெற வேண்டும்.
-
மத்திய மாநில அரசுகள் ஏராளமான மானிய திட்டங்களை வழங்குகின்றன அதனை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
Read more
வீட்டு செடிகளுக்கு இயற்கை பூச்சிக்கொல்லிகள் தயாரிப்பு முறை!!
அகத்தி கீரையில் இவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கிறதா?
Share your comments