வேளாண் சுற்றுலா தற்போது வளர்ந்து வரும் துறையாக மாறி வருகிறது. தமிழகத்தில் இதற்கு வித்திடும் வகையில் தனது 16 ஆண்டுக்கால அர்ப்பணிப்புடன் வேளாண் சுற்றுலாத் துறையில் தடம் பதித்து வருகிறார் திருச்சியைச் சேர்ந்த விவசாயி நவீன் கிருஷ்ணன் (Naveen Krishnan) அவர்கள்.
நவீன் கார்டன் - Naveen Garden
திருச்சி மாவட்டம், முசிறியில் நவீன் கார்டன் என்ற பெயரில் சுமார் 20 ஏக்கரில் ஒருங்கிணைந்த பண்ணை அமைத்து அதனை வேளாண் சுற்றுலா மையமாக மாற்றி லாபம் பார்த்து வருகிறார்.
கிருஷி ஜாக்ரன் தமிழ்நாடு நடத்தும் Farmer the Brand-ன் FaceBook நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது தொழில் மற்றும் பண்ணையின் சிறப்புகள் குறித்து விரிவாக உரையாடினார்.
பார்வையாளர்களைக் கவரும் அரியவகை மிருகங்கள்
அப்போது வேளாண் சுற்றலா பண்ணையில் கோழிப் வளர்ப்பு, பால் பண்ணை, செம்மறி ஆடு வளர்ப்பு போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். மேலும் கழுதை, ஒட்டகம், பாரசீக பூனை, கூஸ் வாத்து, அரியவகை தென் ஆப்பிரிக்கா பச்சை பேரோந்தி உள்ளிட்டவை பார்வையாளர்களைக் கவரும் வகையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இது மட்டும் இன்றி இந்த பண்ணையின் செல்லப்பிராணிகளுக்கு முக்கியத்துவம் தரப்படுவதாகவும் இங்கு லாப்ரடர், பக், போன்ற 15 வகை நாய்கள், பறவைகள், மீன்கள் போன்றவையும் பராமரிக்கப்பட்டுகிறது என்றார்.
தமிழகத்தில் கழுதைகள் பயன்பாடு குறைந்து வரும் வேளையில் அதனை ஒரு பொழுதுக்போக்கு அம்சமாக வளர்க்கப்பட்டு வந்ததாகவும், அதுவே தற்போது தொழிலாக மாறிவிட்டதாக குறிப்பிடும் நவீன், இந்த பண்ணையில் கழுதைகள் பராமரிக்கப்பட்டு விற்பனையும் நடைபெறுவதாக குறினார்.
மரத்திலான வீடு - Wooden House
முழுவதும் மரத்திலான வீடு இந்த பண்ணையில் சிறப்பம்சம் என்று குறிப்பிடும் நவீன் கிருஷ்ணன், இந்த வீட்டில் படுக்கை வசதி, ஏசி, பாரம்பரிய கிராம உணவு, குளியல் அறை உள்ளிட்டவை உள்ளது. இங்கு சுமார் 30 பேர் வரை இந்த பண்ணையில் தங்கி பயிற்சி பெறும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.வீட்டின் மேல் தளத்தில் காற்றோட்ட வசதியுடன் அமர்ந்து பேசி பண்ணையைப் பார்வையிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
120 மர வகை கொண்ட அடர் காடு - 120 Types of Tress
மாதுளை, குமிழ் தேக்கு, அத்தி, கொடுக்கபள்ளி, பாதாம், பூ மருது உள்ளிட்ட 120 வகைகளில் சுமார் 6000 மரங்களும் இந்த பண்ணையில் பராமரிக்கப்படுகிறது. இதன் மூலம் மியாவாக்கி காடுகளுக்கு (Miyawaki forest) இணையான அடர் காடு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் இங்கு வரும் சுற்றுலா வாசிகளுக்குக் காடுகள் பராமரிப்பு, அதன் நன்மைகள் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
140 அடி நீலம், 70 அடி அகலம், 12 அடி ஆழம் கொண்ட ஒரு பெரிய விவசாய குளம் உள்ளது. இதன் மூலம் இங்கு உள்ள மரங்களுக்கு நீர் பாய்ச்சப்படுகிறது. இங்கு வரும் பார்வையாளர்கள் இதனை நீச்சல் குளமாகவும் பயன்படுத்தி வருகின்றனர் என்கிறார் நவீன் கிருஷ்ணன்.
பயிற்சி வகுப்புகள் - Training sessions
இங்கு சுற்றுலா வரும் பார்வையாளர்களுக்கு விவசாயம், ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, தேனி வளர்ப்பு, செல்லப்பிராணிகளுக்கான பயிற்சி வகுப்புகள், தோட்டக்கலை, பயிர்கள் தொடர்பாக வகுப்புகள் ,பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு வகுப்புகளும் எற்பாடு செய்யப்படுகிறது. விவசாயம் குறித்து முழுவதும் அறிய விரும்பும் கல்லூரி மாணவர்களுக்கு தங்கும் வசதிகளும் ஏற்படுத்தப்படுகிறது.
கட்டண நிர்ணயம் - Tarriff
விவசாயிகள் பண்ணையை இலவசமாகப் பார்வையிடலாம், பள்ளி மாணவர்களுக்கு தலா 100 ரூபாய், பொதுமக்களுக்கு தலா 200 ரூபாய் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, நாள் முழுவதும் தங்க பயிற்சி பெற 500 ரூபாய் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இன்னும் பல அறிய விஷயங்களை இந்த பண்ணையில் வரும் காலங்களில் செயல்படுத்தவுள்ளதாகக் குறிப்பிடும் நவீண் கிருஷ்ணன்,சுற்றுலா பண்ணையைத் தொழிலாகத் தேர்ந்தெடுக்கும் முன் அது குறித்து விரிவான புரிதல் மிகவும் அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார். சுற்றுலா பண்ணையில் இருந்தும் தின வருமானம், மாத வருமானம் , ஆண்டு வருமானம் உள்ளிட்ட திட்டமிடல் மிகவும் அவசியம் என்றார். இதன் மூலம் மாதம் 50000 ரூபாய் வரை லாபம் ஈட்டிவருவதாகவும் இந்த தொழிலில் லாபம் பெற முறையான திட்டமிடல் அவசியம் என்றும் குறிப்பிடுகிறார்.
தொடர்புக்கு : 98423 53713; நீவின் கிருஷ்ணன்
Click to know more on Naveen Garden
More related link
தாய்ப்பாலுக்கு நிகரான இன்பம் தேங்காய் பால் வெர்ஜின் எண்ணெய்! விற்பனையில் அசத்தும் புதுக்கோட்டைக்காரர்!
விலங்கு & பூச்சிகளிடமிருந்து பயிர்களைக் காக்கும் "ஹெர்போலிவ் பிளஸ்"!!
Share your comments