வாய்ப்புகள் கதவைத் தட்டும் போது அதனை சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறவர்கள் மட்டுமே வாழ்க்கையில் வெற்றியாளர்கள் ஆகிறார்கள். அதற்கு உதாரணமானவர்களில் ஒருவர் தான் சென்னையைச் சேர்ந்த பார்த்திபன் பரமசிவம்.
இவர் தனது பன்னிரண்டாம் வகுப்போடு கல்வியிலிருந்து விலகி ஜோஹோ பள்ளியில் சேர்ந்தார். ஆறு மாதத்தில் அதே நிறுவனத்தில் வேலை வாய்ப்பையும் பெற்றார். இன்று அவருக்குக் கீழ் பல முன்னணி கல்வி நிறுவனங்களில், கல்லூரிகளில் படித்தவர்கள் ஜூனியர்களாக பணிபுரிந்து வருகின்றனர் எனபது குறிப்பிடத்தக்கது.
வறுமையின் காரணமாக, அவர்களால் மேற்படிப்புக்காக கல்லூரிக்கு செல்ல முடியாது என்பதை அந்த சிறு பார்த்திபனும், அவரது அண்ணனும் புரிந்து கொண்டனர். எனவே, மேலும் மேலும் பெற்றோருக்கு கல்விச் செலவு சுமையை ஏற்படுத்த அவர்கள் விரும்பவில்லை. தாங்களே ஏதேனும் பகுதிநேர வேலை பார்த்தோ அல்லது உதவித்தொகை பெற்றோ மேற்கொண்டு கல்வியைத் தொடர்வது என அவர்கள் முடிவு செய்தனர்.
அந்த நிலையில்தான், ’ஜோஹோ ஸ்கூல் ஸ்காலர்ஷிப் டெஸ்ட்’ என்ற அறிவிப்பைப் பார்த்து அதற்கு விண்ணப்பித்துள்ளார். ஏதாவது உதவி கிடைக்கும் என நினைத்து அதில் கலந்து கொள்ள எண்ணினர். அதில் தேர்ச்சியும் பெற்று பள்ளியில் சேர்ந்து அத்துனை மாணவர்களில் பார்த்திபன் டாப்பராக வந்துள்ளார்.
கையில் கம்பியூட்டர் இல்லாத நிலையிலும் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார். கணக்கு மீது கொண்ட ஆர்வமே அவரை ஜோஹோவில் சேர வைத்திருக்கிறது எனக் கூறியுள்ளார். அந்த ஆர்வம் தான் ஜோஹோ பள்ளியில் சேர்ந்த பின்னரும் தன்னை பலமாக வைக்க உதவியது என்றும் கூறியுள்ளார்.
பன்னிரண்டாம் வகுப்பு மட்டுமே முடித்திருந்த பார்த்திபனை ஜோஹோ பள்ளியில் சேர அவரது குடும்பமும், சுற்றமும் அவ்வளவு சுலபமாக சம்மதிக்கவில்லை. பள்ளிக்குப் பிறகு கல்லூரி சேர்ந்தால் மட்டுமே எதிர்காலத்தில் வேலை கிடைக்கும் என்ற சமூகத்தின் நிலையை வாதமாக பார்த்திபன் முன்னிலையில் வைத்தனர். ஆனால் அவர்களது அவநம்பிக்கைகளை உடைத்து, தனக்குக் கிடைத்த நல்வாய்ப்பாக ஜோஹோ பள்ளியில் பெற்றிருக்கிறார்.
மேலும் படிக்க
TCS 2022: TCS பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்! முன் அனுபவம் தேவையில்லை!!
அரசாங்க வேலைகளில் 26904 காலியிடங்கள்: 10வது 12வது தேர்ச்சி போதும்!
Share your comments