1. வெற்றிக் கதைகள்

Stockholm Diamond League: தேசிய சாதனையை முறியடித்தார், நீரஜ் சோப்ரா

Deiva Bindhiya
Deiva Bindhiya
Stockholm Diamond League: Breaks national record, Neeraj Chopra

Stockholm Diamond League results: மதிப்பு மிக்க ஸ்டாக்ஹோம் டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில் 89.94 மீ தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா. 90 மீ என்ற மைல்கல்லைத் தொட 6 செமீ மட்டுமே குறைவு என்பது குறிப்பிடதக்கது. இந்த த்ரோ அவரது சிறந்த த்ரோ எனக் கூறப்படுகிறது.

நேற்று மற்ற த்ரோக்களில் 84.37மீ, 87.46மீ, 86.67மீ, 86.84மீ, ஆனால் பைனல்ஸ் அவரின் த்ரோ 89.94 ஆகும். நீரஜ் சோப்ரா (Neeraj Chopra), தேசிய சாதனையான 89.30 என்ற தூரத்தைக் கடந்து புதிய தேசிய சாதனை படைத்துள்ளார்.

உலக சாம்பியனான கிரெனடா நாட்டின் ஆண்டர்சன் பீட்டர்ஸ், இந்த முறை 90.31 தூரம் வீசி தங்கம் வென்றுள்ளார். இது அவரது 3வது முயற்சியில், அவர் கண்ட வெற்றியாகும்.

ஆண்டர்சன் பீட்டர்ஸ்(Anderson Peters) இருமுறை 90மீ தூரத்தை, இந்த சீசனில் கடந்துள்ளார். டைமண்ட் லீகின் தோஹா லெக்கில் 93.07மீ, நெதர்லாந்தில் 90.75மீ வீசி எறிந்தார்.

மேலும் படிக்க: July Bank Holiday 2022: எத்தனை நாட்கள் தெரியுமா?

ஜெர்மனியின் ஜூலியின் வீபர் தனது 5வது முயற்சியில் 89.08மீ தூரம் எறிந்து வெண்கலம் வென்றார். டோக்கியோ ஒலிம்பிக் வெள்ளிப்பதக்கம் வென்ற ஜேகப் வாட்லீயிச் 88.59மீ வீசி எறிந்து 4வது இடமே பிடிக்க முடிந்தது.

8 வீரர்கள் கலந்து கொண்ட, இந்தப் போட்டியில் டோக்கியோ ஒலிம்பிக் வெள்ளி வென்ற வெஸ்லி 7வது இடத்தில் பிடித்து ஏமாற்றம் அளித்தார். அடுத்த டைமண்ட் லீக் மொனாகோவில் ஆகஸ்ட் 10ம் தேதி நடைபெற உள்ளது, இதில் நிச்சயம் சோப்ரா தங்கம் வெல்ல முயற்சி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பூச்சித் தாக்காத தினை சாகுபடி: சில நுணுக்கங்கள்!

90மீ தூரங்களை எல்லாம் சர்வசாதாரணமாக கடக்கும் ஜெர்மனியின் ஜொஹான்னஸ் வெட்டர் காயம் காரணமாக, இந்தப் போட்டிகளில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க:

எரிவாயு சிலிண்டர் விலை ரூ.187 குறைந்தது!

சாக்கடை நீரில் இருந்து சூப்பர் 'பீர்': குடிமகன்களுக்கு குஷி!

English Summary: Stockholm Diamond League: Breaks national record, Neeraj Chopra Published on: 01 July 2022, 10:51 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.