ஆரோக்கியமான வாழ்க்கைக்கு எப்போதும் இயற்கை முறையே சிறந்த துணையாக இருந்து வருகிறது. அந்த வகையில் பழந்தமிழர் காலத்திலிருந்தே உணவு வகைகளில் நீங்க இடம் பிடித்துள்ளது இந்த சிறுதானியங்கள்
நம் முன்னோர்கள் நோய் நொடியின்றி நீண்ட நாட்கள் வாழ்ந்ததற்கு இந்த சிறுதானியங்களும் முக்கிய பங்கு இருந்துள்ளது. ஆனால் தற்போதைய நவீன மயமாக்கள் காரணமாக இந்த சிறுதானியங்களின் பயன்பாடு மிகவும் குறைந்து போய் விட்டது. உணவு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதை காட்டிலும் சீக்கிரம் தயார் ஆனால் போதும் என்ற மன நிலையில் தான் நாம் அனைவரும் துரித உணவைத் தேடி (Fast Foods) ஓடிக்கொண்டிருக்கிறோம்.
ஹெ.டயா புட்ஸ் இயற்கை சிறுதானிய ஃபிளேக்ஸ்
அந்த வகையில், சிறுதானியங்களை துரித உணவு வகைகளுக்கு ஈடாக தயாரித்து அசத்தி வருகிறது ஹெ.டயா புட்ஸ் (H- DIA Foods). உடலுக்கு ஊட்டச்சத்து மிகுந்த அனைத்து வகை சிறுதானியங்களையும் இயற்கை முறையில் ஃபிளேக்ஸ் (Flakes) சீவல் வடிவில் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்களம் பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கம் கடந்த 27 வருடங்களாக இயற்கை முறையை பயன்படுத்தி சிறுதானியங்களை ஃபிளேக்ஸ், இனிப்பு மிட்டாய் போன்ற வகைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இது குறித்து கிருஷி ஜாக்ரன் தமிழ்நாடு இணையதள ஃபேஸ்புக் பக்கத்தின் மூலமாக நடைபெற்ற ''Farmer the Brand'' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். வீடியோவைக் காண இங்கே கிளிக் செய்யவும்.
ஃபிளேக்ஸ் - சீவல் (Flakes - Chips) வகைகள்
அப்போது பேசிய அவர் சிறுதானியங்ளை தானே விவசாயம் செய்து அதனை மதிப்பு கூட்டு பொருளாக மாற்றி விற்பனை செய்து வருவதாக தெரிவித்தார். மேலும் சிறுதானியங்களை சீவல் (Flakes) போன்று தயாரித்து எளிதில் சாப்பிடும் வகையில் விற்பனை செய்து வருவதாக குறிப்பிட்டார்.
எங்களிடம் கம்பு, வரகு, திணை , ராகி, சோளம், சிவப்பு அரிசி, கோதுமை, குதிரைவாலி போன்ற அனைத்து வகைகளும் எளிய முறையில் சாப்பிடும் வகையில் தயாரிக்கப்பட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு விற்கப்படுவதாக கூறினார்.
இது போன்ற துரித பொருட்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக குறிப்பிட்ட அவர், குழந்தைகளுக்கு தினமும் பாலில் இது போன்ற சீவல் வகை சிறுதானியங்களை கலந்து தருவதால் நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும். அனைத்து வகை சீவலும் (Flakes) 200கிராம் ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இந்த சீவல் வகைகளை சாம்பார், பால், ரசம், போன்ற உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம் என்றும், உப்புமா, மிச்சர் போன்று சாப்பிடும் வகையிலும் சிறுதானியங்கள் தயாரிக்கப்டுகிறது என்றார்.
மில்லட் பார் (Millet bar)
ஐந்து வகை சிறுதானியங்களை ஒன்று சேர்த்து நாட்டு சர்க்கரை பயன்படுத்தி மில்லட் பார் (Millet bar) என்ற இனிப்பு மிட்டாய் தயாரிக்கப்படுவதாகவும், இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும், இதில் அதிக ஊட்டச்சத்து உள்ளதால் குழந்தைளுக்கு பயம் இன்றி தரலாம் என்றும் இந்த மில்லட் பாரின் 20கிராம் விலை ரூ.15க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றார்.
அப்பாவின் தொழிலுக்கு உதவும் மருத்துவர்
தனது அப்பாவின் தொழிலுக்கு துணையாக இருந்து வரும் ராஜமாணிக்கத்தின் மகளும் மனநல அலோசகருமான மஞ்சு பார்கவி சிறுதானிய தயாரிப்புகள் குறித்து பேசுகையில், நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை நல்ல முறையில் இந்த சிறுதானியங்கள் வழங்கும் என்றும், எந்த ஒரு பின்விளைவுகளையும் ஏற்படுத்தாது என்றார். மேலும் இதில் அதிக கலோரிகள் இருப்பதால் இது போன்ற உணவு வகைகளை குழந்தைகளுக்கு அளிப்பதன் மூலம் நல்ல வளர்ச்சிக்கு ஆற்றலை கொடுக்கும் என்றார்.
இந்த சிறுதானிய வகைகள் சாதாரனமாகவும், புதினா, முருங்கை போன்ற இயற்கை முறை ஃபிளேவர்கள் (Flavour) கலந்து விற்கப்படுகிறது, இது போன்ற சிறுதானியங்ளை அனைத்து தரப்பினரும் உட்கொள்ள முடியும் என்றார். உணவை சாப்பிட மறுக்கும் குழந்தைகளும், எங்கள் சிறுதானிய சீவல்களை பார்த்தால் விரும்பி சாப்பிடுவார்கள் என்றும் மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.
மேலும் படிக்க..
தித்திக்கும் தேன் உற்பத்தி & விற்பனையில் கலக்கும் ஈரோடு தம்பதி!
Share your comments