கோழியில் இருந்து முட்டை வந்ததா, முட்டையில் இருந்து கோழி வந்ததா என்ற ஆராய்ச்சிகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, கோழியே இல்லாமல் முட்டை உருவாக்க முடியும் என்பது ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சத்துக்கள் (Nutrients)
முட்டையின் வெள்ளைக்கருவிலுள்ள புரதம் நமக்கு ஊட்டம் தரக்கூடியது. இதனால்தான் பலரும் 'ஓவால்புமின்' என்ற புரதத்திற்காக முட்டையை உணவில் தினமும் சேர்த்துக்கொள்கின்றனர்.
எனவெ ஓவால்புமினுக்காக, ஏராளமானக் கோழிகளை, பண்ணைகளில் வளர்க்கும் சூழல் உள்ளது. அதேநேரத்தில் முட்டையின் பெரும்பங்கு இறைச்சியாகப் பயன்படுகிறது. எஞ்சியவை பெரும்பாலும், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் கழிவுகளாக மாற்றப்படுகின்றன.
ஆராய்ச்சி (Research)
இந்த அவலத்தைப் போக்க, தாவரங்கள் மூலமாகவே முட்டையில் உள்ள புரதத்தை வளர்த்து எடுக்க சில விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.
அண்மையில் ஹெல்சிங்கி பல்கலைக்கழகம், பின்லாந்தின் வி.டி.டி., தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் விஞ்ஞானிகள், பூஞ்சையிலிருந்து ஓவால்புமின் புரதத்தை தயாரித்துள்ளனர்.
மரபணு (Gene)
கோழியில் ஓவால்புமினை உற்பத்தி செய்ய உதவும் மரபணுவை எடுத்து, 'டிரைகோடெர்மாரீசி' என்ற பூஞ்சையில் புகுத்தி, விஞ்ஞானிகள் இதை சாதித்துள்ளனர்.
இதையடுத்து அந்த பூஞ்சை சுரந்த ஓவால்புமின் புரதத்தை சேகரித்து, ஒரு பொடியாகத் தயாரித்தனர். இந்தப் பொடியை சோதித்ததில், கோழி முட்டையின் வெள்ளைக் கரு பொடியில் உள்ள அத்தனை அம்சங்களும்இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
பூஞ்சைப் பொடியை முட்டைப் பொடியைப் போலவே, தண்ணீர் கலந்து அடித்து கிரீம் போலத் தயாரிக்க முடிந்தது.
மாசு குறைகிறது
பூஞ்சையில் விளையும் ஓவால்புமின் புரதத்தை இந்த உலகம் உணவாக ஏற்றுக்கொண்டால் என்னவாகும்? கோழிப்பண்ணை மற்றும் தீவனத்திற்காக பயன்படுத்தப்படும் நிலத்தில் 90 சதவீதம் மிச்சமாகும். பண்ணைத் தொழில்களால் வெளியேற்றப்படும் பசுமைக்குடில் வாயுக்களில் 30-55 சதவீதம் தடுக்கப்படும்.மொத்தத்தில் பூஞ்சைப் புரதம் பூமியை மாசு குறைந்ததாக ஆக்கும்.
மேலும் படிக்க...
320 பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி: விவசாயி அசத்தல்!
மக்காச்சோள சாகுபடி: படைப்புழுத் தாக்குதலால் குறையும் சாகுபடி பரப்பு!
Share your comments