1. கால்நடை

யானையின் சாணத்தில் மாஸ்க், பிளாஸ்டிக் கவர்கள்: அதிர்ச்சியில் கால்நடை மருத்துவர்கள்!

R. Balakrishnan
R. Balakrishnan
Elephant dung has plastic covers

கோவை வனச்சரகத்துக்கு உட்பட்ட மருதமலை செல்லும் பாதையில் இருந்த யானையின் சாணத்தில், முகக் கவசம், காலியான பால் பாக்கெட், சாம்பார் பொடி பாக்கெட், பிஸ்கட் கவர், சானிடரி நாப்கின், பெண்கள் தலைமுடியை கட்டும் பேண்ட் உள்ளிட்டவை இருந்தது வன உயிரின ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மோப்பசக்தி (Mob Power)

இதுதொடர்பாக வன கால்நடை மருத்துவர்கள் கூறியது: ”நன்கு வளர்ந்த ஒரு யானைக்கு, தினமும் சராசரியாக 150 முதல் 200 கிலோ உணவு தேவை. அதில் 80 சதவீதம் தாவர வகை, 20 சதவீதம் மரவகை உணவை யானைகள் உட்கொள்கின்றன. ஒரு சில யானைகளை 'ஜங்க் புட்' யானை என்றே அழைக்கிறோம். வனத்துக்கு வெளியே கிடைக்கும் உணவை அவை சாப்பிட தொடங்கிவிட்டால், வனத்துக்குள் கிடைக்கும் உணவை சாப்பிட அவற்றுக்கு விருப்பம் இருக்காது. யானைகள் அபார மோப்பசக்தி உடையவை.

பிளாஸ்டிக் (Plastic)

யானைகள் வேண்டுமென்றே பிளாஸ்டிக்கை உட்கொள்ளாது. உணவோடு சேர்ந்து தெரியாமல் அவை உள்ளே சென்றுவிடுகின்றன. சானிடரி நாப்கின் போன்றவற்றில் உப்பு படிந்திருப்பதால் அவற்றை யானை உட்கொண்டிருக்கலாம். கேக், மாவு பொருட்கள், பைனாப்பிள், வாழைப்பழம் போன்ற பழங்களின் கழிவுகள், வெல்லம் போன்ற இனிப்புகள் ஆகியவை யானைகளை ஈர்க்கும். உப்புத்தன்மைக்காக சில பொருட்களாக அவை உட்கொள்ளும்.

வனப்பகுதியை ஒட்டிய இடங்களில் பிளாஸ்டிக் கவர்களில் உணவுப் பொருட்கள் கிடைப்பதை தடுக்க அரசு துறைகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களும் பிளாஸ்டிக் கவர்களில் உணவுப்பொருட்களை அப்படியே தூக்கி எறிவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்” என்றனர்.

மருதமலை வனப்பகுதியை ஒட்டியே சோமையம்பாளையம் ஊராட்சிக்கு சொந்தமாக 7 ஏக்கர் இடத்தில் கடந்த சில ஆண்டுகளாக குப்பை கொட்டி வருகின்றனர். யானைகள் உலவும் பகுதிக்கு அருகிலேயே இந்த இடம் இருப்பதால், அவற்றை ஈர்க்கும் உணவுப்பொருட்கள் அங்கு இருக்கும்போது அதை உட்கொள்ள வாய்ப்பாகிறது.

இதுதொடர்பாக வனத்துறையினர் கூறும்போது, “குப்பை கொட்டும் இடத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பை ஆகியவற்றை தரம்பிரிக்காமல் திறந்தவெளியில் மொத்தமாக கொட்டிச் செல்கின்றனர். குப்பை கிடங்கை சுற்றிலும் வேலி எதுவும் இல்லை.

அப்பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால் 2020, 2021 ஆகிய இரண்டுமுறை வேறு இடத்துக்கு குப்பை கிடங்கை மாற்றுமாறு ஊராட்சிக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை. மலைப்பாதையில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்துமாறு மருதமலை கோயில் நிர்வாகத்திடமும் தெரிவித்துள்ளோம் என்றனர்.

மேலும் படிக்க

கடற்பாசி விவசாயத்தில் புரட்சி: அசத்தியது இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

வீரரோ, காளையோ ஒரு ஜல்லிக்கட்டுப் போட்டியில் மட்டுமே பங்கேற்க அனுமதி!

English Summary: Elephant dung has mask, plastic covers: Veterinarians in shock! Published on: 12 January 2022, 05:09 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.