1. கால்நடை

கோழிகளைத் தாக்கும் வெள்ளைக் கழிச்சல் நோய்- நிவாரணம் தரும் இயற்கை மருந்துவம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Chickenpox - Natural Remedy For Chickenpox
Credit : Nature Hen

கோழிகளைத் தாக்கும் நோய்களில் முக்கிய நோயான வெள்ளைக்கழிச்சல் நோயிற்கு இயற்கை முறையில் மருந்து அளித்து அவற்றைக் குணமாக்கலாம்.

வெள்ளைக் கழிச்சல் நோய் (Ranikhet Disease)

இந்த வெள்ளைக்கழிச்சல் நோய் ( ranikhet disease )என்பது நச்சு உயிரி மூலம் பரவும் நோய் ஆகும்.

அறிகுறிகள் (Symptoms)

  • குறிப்பாக சுவாசக் குழல், உணவுப் பாதை மற்றும் நரம்புகளைக் கடுமையாக பாதிக்கும். 

  • கண் மற்றும் மூக்கில் நீர் வடிதல்

  • மூச்சுத்திணறல்

  • நீர்த்த பச்சை கழிச்சல்

  • கால் இழுத்தல்

  • கழுத்து திருகுதல்

  • இரும்பு, உற்பத்தி திறன் பாதிப்பு

  • கோழிகளின் எச்சம் வொள்ளை நிறத்தில் இருக்கும்

  • அதிக துர்நாற்றம் வீசும் 

  • கோழிகள் குறுகி அமைர்ந்தும்

  • அதிக சுறுசுறுப்பு இல்லாமல் எப்பொழும் உறங்குவது போல ஒரே இடத்தில அமைந்து இருக்கும்.

  • தள்ளாடியபடி நடக்கும் 

  • தலையை இறகுபகுதிக்குள் வைத்து ,இறகுகள் சிலிர்த்தபடி இருக்கும்

  • உணவு மற்றும் தண்ணீர் எடுப்பது நிறுத்திவிடும். அதனால் உடல் மிக நலிவடைந்து எடை குறைந்து மெலிந்து இருக்கும் 

காலம்

குளிர் காலங்களைக் காட்டிலும், கோடை காலங்களிலேயே இந்த நோய் கோழிகளை அதிகளவில் தாக்கும் ஆபத்து உள்ளது.

Credit : Wallpaperflare

இயற்கை மருத்துவம் (Natural Medicine)

தேவையான பொருட்கள்

சீரகம்                   10 கிராம்
மிளகு                    5 கிராம்
மஞ்சள்                  5 கிராம்
கீழாநெல்லி          50 கிராம்
வெங்காயம்           5 பல்
பூண்டு                   5 பல்

இவை அனைத்தையும் அரைத்து அரிசி குரணையில் கலந்து 3 முதல் 5 நாட்கள் கொடுக்கவும். அல்லது சிறு உருண்டைகளாக கோழிகளுக்கு சாப்பிடக் கொடுக்கவும்.இந்த மருந்து கொடுக்கும்போது, குறிப்பாக கருப்பட்டி கலந்த குடிநீர் (அ) சீரகத் தண்ணீர் வழங்குவது அவசியம். இந்த இயற்கை மருந்தைக் கோழிகளுக்கு வாய் வழியாகக் கொடுத்து வர நோய் படிப்படியாக குணமாவதைக் கண்கூடாகக் காணலாம்.

தகவல்
முனைவர் ப.மேகலா
உதவிப் பேராசிரியர்
கோழிகளுக்கான மரபுசார் மூலிகை மருத்துவ ஆராய்ச்சி மையம், கால்நடை மருத்துவமனை வளாகம், நாமக்கல்

மேலும் படிக்க...

மாட்டுச் சாணத்தில் இருந்து குளியல் சோப், டீ - வியப்பூட்டும் விபரங்கள்!

காய்கறி சாகுபடிக்கு ஊக்கத்தொகை - ராமநாதபுரம் விவசாயிகளுக்கு அழைப்பு!

English Summary: Chickenpox - Natural Remedy For Chickenpox Published on: 26 September 2020, 10:22 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.