1. கால்நடை

கறவை மாடுகளை வாங்கும் பொழுது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்

KJ Staff
KJ Staff
Cow and Calf

கால்நடை வளர்ப்பு என்பது விவசாயிகளுக்கு உபத்தொழிலாகவும், லாபம் தரும் தொழிலாகவும் இருந்து வருகிறது. இன்று பெரும்பாலான விவசாயிகள் இயற்கை விவசாயத்தை நோக்கி செல்கின்றனர். ஆரோக்கியமான விவசாயத்திற்கு நாட்டு மாடுகளே சிறந்ததாக வேளாண் அறிஞர்கள் பரிந்துரைக்கிறார்கள். இன்றும் நாட்டுமாடுகள் மீது ஈர்ப்புக் கொண்டவர்கள் ஆர்வமுடன் வளர்த்து வருகிறார்கள். புதிதாக மாடுகளை வாங்குபவர்கள் இடை தரகர்களிடம் ஏமாறாமல் இருக்க சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். 

கறவை மாடுகளை வாங்கும்போது, அதை வளர்க்க ஏற்ற இட வசதி, மேய்ச்சலுக்கான வசதி ஆகியவற்றை உறுதி செய்த பின்னர் வாங்க வேண்டும். மேலும், நமது தட்பவெட்ப நிலை, சீதோஷ்ண நிலைக்கேற்ற மாடுகளைக் கேட்டறிந்து வாங்க வேண்டும். பெரும்பாலும் 3 வயதுக்கு உள்பட்ட மாடுகளையே வாங்க வேண்டும். நோயால் பாதிக்கப்படாத, ஆரோக்கியமான, அதிக பால் உற்பத்தி கொடுக்கக் கூடிய மாடாக இருக்க வேண்டும்.

Cattle Market

கறவை மாடுகளை வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை

  • சிறப்பான பசுவின் தோற்றமும், பெண்மை குணாதிசயங்கள் கொண்ட மாடாக இருக்க வேண்டும். சுறுசுறுப்பாகவும், சாந்தமான மனநிலை கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
  • பசுவின் தோல் பளபளப்பாகவும், மினுமினுப்பாகவும், தோல் மிருதுவாகவும், இழுத்து விட்டால் உடனடியாக பழைய நிலைக்கு செல்லும் தன்மை உடையதாகவும் இருக்க வேண்டும்.
  • கண்கள் பளிச்சென்று துறுதுறுப்பாகவும், மூக்கு அகலமானதாகவும், மூக்கின் நுனிப்பகுதி ஈரமானதாகவும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே ஆரோக்கியமான பசு என கருத்தில் கொள்ள முடியும்.
  • மாட்டை பக்கவாட்டில் பார்க்கும்போது, உடல் நீள வடிவ முக்கோணமாக இருக்க வேண்டும்.
  • முதுகுப் பகுதி வளைந்தில்லாமல் நேர்க்கோடாக இருக்க வேண்டும். கால்கள் வலுவானதும், வளைந்து இல்லாமலும் இருக்க வேண்டும்.

milking Cow

  • பால்மடியானது தொடைகளுக்கு நடுவில் பின்புறம் சிறிது உயரத்தில் இருந்து தொடங்கி வயிற்றின் முன் பாகம் வரை இருப்பது நல்ல பால் உற்பத்திக்கு அடையாளமாகும்.
  • பால்மடி தொடுவதற்கு மிருதுவாகவும், பால் கறந்தவுடன் மடி வற்றிப் போகவும் வேண்டும். பால் காம்புகள் மிகப் பெரியதாகவோ, சிறியதாகவோ இல்லாமல் ஒரே அளவு இடைவெளியுடன் இருக்க வேண்டும்.
  • எல்லா காம்புகளிலும் கறவை பால் வருகிறதா என்பதை சோதித்துப் பார்க்க வேண்டும்.
  • மடியில் ஓடும் ரத்த நாளங்கள் வளைந்தும், புடைத்தும் காணப்பட வேண்டும். அப்படி இருந்தால் மாட்டுக்கு நல்ல ரத்த ஓட்டம் இருப்பதையும், பால் சுரக்கும் தன்மையையும் அறிய முடியும்.
  • கறவை மாடுகளை சந்தையில் சென்று வாங்காமல் கால்நடை வளர்க்கும் விவசாயிகளிடம் நேரடியாகச் சென்று வாங்குவதே நலம். நமது மண்ணுக்கேற்ப அனைத்து சீதோஷ்ண நிலையையும் தாங்கக் கூடிய கலப்பின மாடுகளை வாங்குவதே மிகச் சிறந்ததாகும்.

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Do you know how to recognize a healthy dairy cow, while we are going to buy?

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.