கொரோனா ஊரடங்கு கெடுபிடியால், நாடு முழுவதும் இறைச்சி மற்றும் மீன்களின் விலையை 30 சதவீதம் வரை உயர்த்தி வியாபாரிகள் லாபம் சம்பாதித்தனர்.
உணவுப்பிரியர்களைப் பொருத்தவரை, அசைவம், சைவம் என இரண்டு பிரிவுகள் உண்டு.
விருப்ப உணவு
இதில் அசைவப்பிரியர்கள் என வரும்போது, குறைந்தபட்சம் வாரத்தில் 2 நாட்களில் வீட்டில் அசைவ உணவுகளை சமைத்து சாப்பிடுவது கட்டாயம். அதே நேரத்தில், வசதி படைத்தவராகவோ, நல்ல வருமானம் ஈட்டுபவராகவே இருப்பின் 2 அல்லது மூன்று முறை ஹோட்டல் உணவையும் ஒரு பிடி பிடிப்பது வழக்கம்.
அதிலும் மாதத்திற்கு இரண்டுமுறை குடும்பத்தோடு ஹோட்டல் சென்று, தங்கள் மனம் கவர்ந்த, வகை வகையான அசைவ உணவுகளை ஆர்டர் (Order) செய்து ஆசை தீர உண்டு மகிழ்வார்கள். குறிப்பாக தங்களால், வீட்டில் செய்ய முடியாத கடல் உணவுகளே இவர்களது விருப்பப் பட்டியலில் இடம்பெறும்.
அசைவ விருந்து
அதிலும் மாதத்திற்கு இரண்டுமுறை குடும்பத்தோடு ஹோட்டல் சென்று, தங்கள் மனம் கவர்ந்த, வகை வகையான அசைவ உணவுகளை ஆர்டர் (Order) செய்து ஆசை உண்டு மகிழ்வார்கள். குறிப்பாக தங்களால், வீட்டில் செய்ய முடியாத கடல் உணவுகளே இவர்களது விருப்பப் பட்டியலில் இடம்பெறும்.
கொரோனாவால் குட்பை
ஆனால் அலுவலக நெருக்கடி உள்ளிட்டவற்றால் வெளியே போக முடியாத நிலையில், ஆன்லைனில் ஆர்டர் செய்து, வீட்டிற்கு வரவழைத்து விருப்பப்படி சாப்பிட்டு மகிழ்வர்.
ஆனால், இவை அனைத்திற்கும் குட்-பை சொல்ல வைக்கும் விதமாக கொரோனா அரக்கன் குடிகொண்டான்.
நாட்டின் பல பகுதிகளில் போடப்பட்ட ஊரடங்கால், கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் வீடுகளிலே மக்கள் முடங்க நேர்ந்தது. இதனால் இறைச்சி மற்றும் மீன் விற்பனையார்கள் உட்பட அனைத்து தரப்பினரும் வருமானத்தை இழந்தனர்.வீடுகளில் முடங்கிய அசைவப்பிரியர்கள், இறைச்சி மற்றும் மீன் உணவுகளை ருசிக்க முடியாமல் தவித்தனர்.
விலை உயர்வு
ஊரடங்கு படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டபோது, இறைச்சி மற்றும் கடல்உணவுகளைத் தேடிச் சென்றனர். இதனைப் பயன்படுத்திக்கொண்டும், இழந்த நஷ்டத்தை ஈடு கொடுக்கும் வகையிலும், இறைச்சி மற்றும் மீன் வியாபாரிகள், இவற்றின் விலையைக் கடுமையாக உயர்த்தினர்.
சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில், முன்பு 600 முதல் 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ ஆட்டு இறைச்சி, கொரோனா நெருக்கடியால் 1200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. எனினும், உடல் நலத்திற்கும், நோய் எதிர்ப்புச் சக்திக்கும் அசைவ உணவு தேவை என்பதாலும், நாக்கிற்கு அடிமையாகி விட்டதாலும், எப்போதும் வாங்குவதைவிடக் குறைந்த அளவில் வாங்கி ருசித்தனர் அசைவப்பிரியர்கள்.
30% உயர்வு ( Price rise)
இதனிடையே மீன்பிடித் தடைகாலமும் இருந்ததால், ஆடு, கோழி உள்ளிட்டவற்றின் இறைச்சியையே வாங்கி சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். பின்னர் மீன்பிடித் தடைகாலம் முடிவடைந்தும், மீன்களின் விலையும், 10 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்தது.
இதுமட்டுமல்லாமல், உணவு தானியங்களின் விலையும் கிடுகிடுவென அதிகரித்தது. ஏற்கனவே கொரோனா ஊரடங்கு காரணமாக, வருமானத்தை இழந்த மக்களுக்கு, இந்த விலைஉயர்வு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், இந்த விலைஉயர்வால் ஆடு மற்றும் கோழிப்பண்ணையாளர்கள் பெரியளவில் லாபம் சம்பாதிக்கவில்லை. அவர்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி வழக்கம் போல் அதிக லாபம் ஈட்டியது வியாபாரிகளே.
மேலும் படிக்க...
மழைக்காலங்களில் பாம்புகளின் நடமாட்டம் அதிகரிக்கும் -விவசாயிகள் கவனத்திற்கு!
பசுஞ்சாண விறகு தயாரித்து லாபம் ஈட்டலாம்- அருமையான தொழில்வாய்ப்பு!
Share your comments