கிராமப்புறங்களில் சாதாரண கோழி வளர்ப்பில் முறையான நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாததால், இறப்பு விகிதம் அதகரிக்கிறது. நாட்டுக்கோழிகள் பெரும்பாலும் வெளியில் சென்று தான் மேய்கின்றன.
கால்சியம் சத்து
குப்பைகளை கிளறியும் நிலத்தில் உள்ள கழிவுகளையும் பச்சைப் புற்களையும் சேர்த்து சாப்பிடுகின்றன. இதன் இறைச்சி இயற்கையாகவே மணமும், ருசியும் கொண்டுள்ளதால் இவற்றின் விலையும் அதிகம். சதைப்பகுதியில் உள்ள திசுக்கள் சுவையை தருகின்றன. சில கோழிகள் தோல் முட்டையிடும். இது வீட்டுக்கு ஆகாது என நினைத்து விற்றுவிடுவர். கால்சியம் (Calcium) எனப்படும் சுண்ணாம்புச்சத்து குறைபாடு காரணமாகவே இவை தோல் முட்டையிடுகின்றன. முட்டையின் ஓடு கால்சியம் சத்துக்களால் உருவாகிறது. தீவனத்தில் கால்சியம் சத்து குறைவு அல்லது பற்றாக்குறை ஏற்பட்டால் மெல்லிய ஓடுடன் முட்டையிடுவது இயற்கை. தீவனத்துடன் சுண்ணாம்புக்கல் அல்லது கிளிஞ்சல்கள் சேர்த்து கொடுத்தால் நல்ல முட்டைகளை இடும்.
அடை காக்கும் குணம்
கோழிகள் நீண்ட நாள் அடை காப்பதால் முட்டையிடவில்லை என அவற்றை நீரில் மூழ்கி தெளியவைப்பதோ, மூக்கில் இறகு குத்தி கொடுமைப்படுத்துவதோ தவறு. இதுபோன்ற தவறான பழக்கங்களால் அவற்றின் அடை காக்கும் குணம் மாறாது.
சத்துக்கள்
முட்டையின் மஞ்சள் கரு அதிக மஞ்சளாக (Yellow) இருந்தால் சத்து அதிகம் என்பதும் தவறு. நாட்டுக்கோழிகள் மேய்ச்சல் முறையில் புற்களை சாப்பிடுவதால் அதில் உள்ள சாந்தோபில் எனும் நிறமி முட்டையின் மஞ்சள் கருவுக்கு அதிக நிறத்தை தருகிறது. பண்ணையில் ரெடிமேடு தீவனங்களை கொடுப்பதால் வெளிர் மஞ்சள் நிற கரு இருக்கும். இதற்கும் சத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சத்துகளும் மாறாது.
மேலும் தகவலுக்கு
ராஜேந்திரன்
இணை இயக்குனர் (ஓய்வு)
கால்நடை பராமரிப்பு துறை
திண்டுக்கல்,
73580 98090
மேலும் படிக்க
பயிர்களைப் பாதுகாக்க உயிர்வேலி அமைப்பு முறையை விவசாயிகள் கையாள வேண்டும்! இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பார்ப்பு!
மாம்பழம் விலை வீழ்ச்சியால், அரசே விலையை நிர்ணயிக்க விவசாயிகள் கோரிக்கை!
Share your comments