1. கால்நடை

வெள்ளாடு பராமரிப்பு! அதிக பால் உற்பத்தி பெற சிறந்த தீவன மேலாண்மை

KJ Staff
KJ Staff
Goat Care

பிற கால்நடைகளைப் போல், ஆடுகளும் நல்ல தீவனமும் பராமரிப்பும் இருந்தால் அதிக பால் உற்பத்தி கொடுக்கும். ஆனால் கிராமங்களில் மேய்ச்சலுடன் நிறுத்தி விடுகின்றனர். சரியான அளவு அடர் தீவனங்களும், பயறு வகைகள் அளித்தால் ஆடுகளிடமிருந்து நல்ல இறைச்சியும், பாலும் கிடைக்கும்.

தீவன ஊட்டம்

ஆடுகள் தனிப்பட்ட தீவன ஊட்டத்தையே விரும்புபவை. ஆடுகளுக்கு கொடுக்கும் தீவனங்கள் அடிக்கடி மாற்றப்பட்ட, சுத்தமான, புதியவையாக இருத்தல் வேண்டும். தீவனங்களை மரக்கிளை, சுவர், நட்டு வைத்த குச்சி போன்ற ஏதேனும் ஒன்றில் கட்டித் தொங்கவிடலாம். இவ்வாறு வைப்பதன் மூலம், புற்கள் அல்லது தழைகள் கீழே விழுந்து வீணாகாமல் இருக்கும். மேலும் அவ்வப்போது சிறிது சிறிதாக ஆடுகளுக்குத் தீவனமளிக்கலாம்.  இல்லையென்றால் அதிக அளவில் ஒரே நேரத்தில் கொடுக்கும் போது பாதித் தீவனம் ஆடுகளின் காலில் மிதிபட்டு வீணாகிறது.

ஆடுகளும் அசை போட்டு உண்ணக்கூடியவை.குதிரை மசால், துவரை, நேப்பியர் புல், தர்ப்பைப்புல், சோயாபீன், முட்டைக்கோஸ், காளிஃபிளவர் போன்றவற்றின் இலை தழைகளையும் செஞ்சி மற்றும் சில பூண்டுகளையும் நன்கு உண்கின்றன. இவைத் தவிர புளியமரம், வேம்பு, இலந்தை போன்றவற்றின் தழைகளையும் வேர்க்கடலை போன்ற பயிறுகளையும் உண்ணும் இயல்புடையவை.

தேவையான ஊட்டச்சத்துக்கள்

ஆடுகளுக்கு 3 முக்கியக் காரணங்களுக்காக ஊட்டசத்துத் தேவைப்படுகிறது. அவை பராமரிப்பு உற்பத்தி (பால், இறைச்சி, உரோமங்கள்) மற்றும் சினைத் தருணத்தில் தேவைப்படுகிறது.

Goat feeding management

பராமரிப்புக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள்

ஆடுகளின் பரிணாம வளர்ச்சிக்கு மற்ற கால்நடைகளை விட அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. எனவே ஆடுகளுக்கு 25-30 சதவிகிதம் பராமரிப்பு அதிகம் தேவைப்படுகிறது. பராமரிப்புத் தேவை 0.09 சதவிகிதம் செரிக்கக்கூடிய பண்படாத புரதம் ஊட்டச்சத்துக்கள் அடங்கிய கலவையாக இருக்கலாம். மற்ற மாடுகள், எருமைகள், செம்மறி ஆடுகளுடன் ஒப்பிடும் போது வெள்ளாடுகள் மட்டுமே மிக அதிகமாக அதன் உடல் எடையில் 6.5 - 11 சதவிகிதம் அளவ உணவு எடுக்கக்கூடியது. மற்ற கால்நடைகள் அவற்றின் உடல் எடையில் 2.5-3 சதவிகிதம் வரை மட்டுமே தீவனம் உட்கொள்ளும். எனவே சரியான அளவு தீவனம் கொடுத்தால் மட்டுமே வெள்ளாடுகள் அதன் தீவனத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளும்.

உற்பத்திக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள்

3 சதவிகிதம் கொழுப்புச் சத்துள்ள 1 லிட்டர் பாலை உற்பத்தி செய்ய 43 கிராம் செரிக்கக்கூடிய பண்படாத புரதமும், 200 கி ஸ்டார்ச்சும் தேவை. அதே போல் 4.5 சதவிகிதம் கொழுப்புச் சத்துள்ள 1 லி பாலை உற்பத்தி செய்ய 60 கி செரிக்கக்கூடிய பண்படாத புரதமும், 285 கிராம் ஸ்டார்ச் சத்துக்களும் தேவைப்படுகிறது.

50 கிலோ எடையுள்ள 2 லி பால் (40 சதவிகிதம் கொழுப்புச் சத்துடன்) உற்பத்தி செய்யக்கூடிய ஆட்டிற்கு 400 கிராம் அடர் தீவனமும், 5 கிலோ குதிரை மசால் போன்ற தீவனங்கள் அளிக்கவேண்டும். 12-15 சதவிகிதம் புரதச் சத்துள்ள தீவனங்கள், உலர் புற்கள் அளிக்கப்படவேண்டும்.

forage managing

தாதுக்கலவை

தாதுக்கள் உடற்செயல் இயக்கம், எலும்புக்கூடு, பால் உற்பத்தி போன்றவற்றில் முக்கியப் பங்கு வகிப்பதால் சரியான அளவு தாதுக்கள் அளிக்கவேண்டியது, அவசியம். இதில்  மிக முக்கியமானவை கால்சியம் மற்றும் பாஸ்பரஸ். 50 கிலோ எடையுள்ள ஆட்டிற்கு கால்சியம் 6.5 கி, பாஸ்பரஸ் 3.5 கி தேவைப்படுகிறது. அடர் தீவனத்தில் 0.2 சதவிகிதம் என்ற அளவில் தாதுக்களைக் கலந்தும் அளிக்கலாம்.

சாதாரண உப்பு

சாதாரண உப்பு, பாலில் சோடியம்,  குளோரைடு மற்றும் இரும்புச் சத்துக்களை அதிகரிக்கச் செய்கிறது. எனவே ஆடுகளுக்கு சாதாரண உப்பு தருவது மிகவும் முக்கியம். ஒரு கட்டி உப்பை ஆடுகள் நாக்கில் நக்குமாறு தருவது மிகுந்த நன்மை பயக்கும் அல்லது தீவனத்துடன் 2 சதவிகிதம் உப்பை கலந்துக் கொடுக்கலாம்.

வைட்டமின் மற்றும் தடுப்பு மருந்துகள்

வைட்டமின் "ஏ", "ஈ" மற்றும் "டி" போன்றவை ஆடுகளுக்கு அத்தியாவசியமானவை.வயிற்றில் உள்ள நுண்ணுயிரிகள் தேவையான வைட்டமின்களை தயாரித்துக்கொள்ளும். அது போக பசும்புற்களில் வைட்டமின் "ஏ" நிறைந்திருக்கும் மக்காச் சோளம், சதையுள்ள பசுந்தீவனம் பிற வைட்டமின்களை தரும். வளரும் ஆட்டுக் குட்டிகளுக்கு வைட்டமின்களின் தேவை அவசியம். 

ஏரோமைசின், டெராமைசின் வளரும் குட்டிகளுக்கு நல்ல தோற்றத்தைத் தருவதோடு, நோய்த் தாக்குதலைக் குறைத்து, வளர்ச்சியை ஊக்கிவி

K.Sakthipriya
Krishi Jagran 

English Summary: Goat Care: For more Milk Production, here are some guidance for Proper Feed Management Published on: 10 September 2019, 10:44 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.