மனிதர்களைப் போல பறவைகளுக்கும் உடல் வெப்பம் அதிகரிக்கும்போது பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. அதில் ஒன்றுதான் கோழிகளில் ஏற்படும் வெப்ப அயற்சி. அதாவது உடல் வெப்பநிலை அதிகரிக்கும் போது அவை உடல்ரீதியிலான சிக்கல்களை எதிர்கொள்கின்றன. இதற்கு இயற்கையான மருந்து மூலம் தீர்வு காண முடியும்.
குணாதிசயங்கள் (Characteristics)
-
கோழிகளுக்கு உகந்த தட்பவெப்பநிலை 25 முதல் 39 டிகிரி சென்டிகிரேட்.
-
வியர்வை சுரப்பிகள் கிடையாது
-
அலகைத் திறந்து வெப்பத்தை வெளியேற்றும்
-
கோடையில் தீவனம் உட்கொள்ளும் அளவு குறைவாக இருக்கும். உற்பத்தியும் குறைவு.
-
மக்காச்சோளம், கம்பு போன்ற மாவுப் பொருட்கள் அதிக வெப்பத்தை வெளிப்படுத்தும்.
தடுப்பது எப்படி?
-
தீவனத்தில் 5 % வரை தாவர எண்ணெய்யை சேர்க்கலாம்
-
நோய் எதிர்ப்புச் சக்தி குறையும். இதனைத் தடுக்க வைட்டமின் E மற்றும் செலினியம் தாது உப்புக்களை 5 % கூடுதலாகச் சேர்க்கலாம்.
-
முட்டை ஓடு உடையாமல் இருக்க சோடா உப்பை டன்னுக்கு 1.5 முதல் 2 கிலோ வரை சேர்க்கலாம்.
-
அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் மட்டும் தீவனம் கொடுக்க வேண்டும்.
கொட்டகை பராமரிப்பு (Shed maintenance)
-
கூரையில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.
-
தண்ணீர் தொட்டிகளுக்கு சுண்ணாம்பு பூசுதல்.
-
தண்ணீர் குழாய்களை கோணிப்பை கொண்டு சுற்றித் தண்ணீர் தெளித்தல் அவசியமாகிறது.
இயற்கை மருந்து (Natural Medicine)
-
சுத்தமான கொதிக்கவைத்து ஆறவைக்கப்பட்ட குளிர்ந்த நீரைக் கொடுக்க வேண்டும்.
-
எலுமிச்சை சாற்றை தண்ணீரில் கலந்து கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.
-
பெருநெல்லி சாற்றினை தண்ணீரிலோ அல்லது பொடியைத் தீவனத்திலோ அரைத்து கொடுக்கலாம்.
-
மதிய வேளையில் மோரைத் தண்ணீரில் கலந்து கொடுக்கலாம்.
முனைவர் ப.மேகலா
உதவிப் போராசிரியர்
கோழிகளுக்கான மரபுசார் மூலிகை மருத்துவ ஆராய்ச்சி மையம்,
கால்நடை மருத்துவமனை வளாகம்
நாமக்கல்
மேலும் படிக்க...
தமிழகத்தில் விவசாயத்திற்கான இலவச மின்வினியோக நேரம் மாற்றம்!
விவசாயிகளுக்கு விரைவில் கரும்பு நிலுவைத் தொகை -அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி!
உயர் மதிப்பு காடுகளை உருவாக்க முயற்சி மேற்கொண்டுள்ள TNAU!
Share your comments