கால்நடைகளில் கோடை காலப் பராமரிப்பு என்பது கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தது. அவ்வாறு பராமரித்தால், பால் உற்பத்தி பாதிப்பில் இருந்து விவசாயிகள் எளிதில் தப்பலாம்.
கோடையில் இருந்து தப்ப (Escape from the summer)
கோடை காலத்தில் ஏற்படும் அளவுக்கு அதிகமான வெப்பத்தினால், கால்நடைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாகப் பசுந்தீவனப் பற்றாக்குறை, கடுமையான வெப்பம் போன்றவற்றால் கறவை மாடுகளில் பால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.
ஈக்களின் பெருக்கமும் அதிகமாகி கால்நடைகளின் மேல் உட்கார்ந்துத் தொல்லை கொடுப்பதால், பசுக்களும் அமைதியிழந்துக் காணப்படும். இதன் காரணமாகவும் பால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. எனவே கால்நடை வளர்ப்போர் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கக்கூடிய சூழல் உருவாகும்.
கட்டுப்படுத்தும் வழிகள் (Ways of controlling)
-
எனவே, இது போன்ற பிரச்னைகளை தவிர்க்க, ஈக்களைக் கட்டுப்படுத்தும் மருந்து தெளிக்கலாம்.
-
தினமும் தொழுவத்தைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும்.
-
பசுந்தீவனங்களைத் தவறாமல் கொடுப்பது அவசியம்.
-
காய்ந்த புல் மற்றும் குழிப்புல்லுடன் அடர் தீவனங்களையும் கறவை மாடுகளின் உணவில் சேர்க்க வேண்டும்.
-
வெயில் அதிகமாக இருக்கும் போது மேய்ச்சலுக்கு அனுப்பு கூடாது.
இவற்றைக் கடைப்பிடித்தால், பால் உற்பத்தி பாதிப்பில் இருந்து கால்நடைகளைப் பாதுகாக்க முடியும் திண்டுக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
மேலும் படிக்க...
Free Cooking Gas: ஒரு கோடி ஏழைகளுக்கு இலவச சமையல் சிலிண்டர்- உடனே விண்ணப்பியுங்கள் !
Share your comments