ராஜஸ்தான் அரசின் கூற்றுப்படி, நகர்ப்புறங்களில் வீட்டில் பசுக்கள் அல்லது எருமைகளை வளர்ப்பதற்கு, இப்போது வருடாந்திர உரிமம் மற்றும் 100 சதுர அடி பரப்பளவு தேவைப்படுகிறது. விலங்குகள் சுற்றித் திரிவது கண்டுபிடிக்கப்பட்டால், 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
உரிமம் இல்லாமல், யாரும் தங்கள் வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட பசு மற்றும் கன்றுகளை வளர்க்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அரசு அதிகாரிகள் கூறினர். கால்நடைகளுக்கு தனி இடமும் கட்டாயமாகும். புதிய விதிமுறைகள் மாநகராட்சி மற்றும் கவுன்சில்களின் அனைத்து பிரிவுகளுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடதக்கது.
உரிமத்திற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
புதிய விதிகளின் கீழ் உரிமத்திற்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர் கால்நடைகளுக்கான திட்டமிடப்பட்ட இடத்தின் விவரங்களையும், சுகாதாரச் சான்றுகளையும் சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் அவற்றை வைத்திருப்பது எந்த இடையூறும் ஏற்படாது என்பது குறிப்பிடதக்கது.
ஆண்டு உரிமக் கட்டணமாக ரூ.1,000 வசூலிக்கப்படும்.
கல்வி, மதம் மற்றும் பிற பொதுநல நிறுவனங்கள் மொத்த தொகையில் பாதியை செலுத்த வேண்டும்.
கால்நடைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் உரிமம் ரத்து செய்யப்படும். கால்நடைகளுக்கு உரிமையாளரின் பெயர் மற்றும் எண்ணை கட்டாயம் குறிக்க வேண்டும் என்றும் அரசு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
உரிமம் பெறாத பட்சத்தில் பொது இடங்களில் மாட்டுத் தீவனம் விற்பனை செய்வது தடை செய்யப்படும். அங்கீகரிக்கப்படாத விற்பனைக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். கால்நடைகளை அடைக்க 170-200 சதுர அடி மற்றும் 200-250 சதுர அடி திறந்தவெளி இடம் தேவைப்படும் என்பது குறிப்பிடதக்கது. கால்நடை உரிமையாளர் பால் அல்லது கால்நடைகளின் பொருட்களை விற்பது போன்ற எந்தவொரு வணிக நடவடிக்கையிலும் ஈடுபடுவது தடைசெய்யப்படும்.
சுகாதாரத்தை மீறும் பட்சத்தில், 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஒவ்வொரு 10 நாட்களுக்கும், கால்நடை உரிமையாளர் நகராட்சி பகுதிக்கு வெளியே மாட்டு சாணத்தை அகற்றும் பொறுப்பை ஏற்க வேண்டி இருக்கும்.
கால்நடைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்பது குறிப்பிடதக்க ஒன்றாகும். எனவே கால்நடை வைத்திருப்போர், தங்கள் உரிமங்களை சரிபார்க்கவும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் படிக்க:
கால்நடை வளர்ப்பு திட்டம் என்றால் என்ன? யாருக்கு இந்த திட்டம்!
Share your comments