கால்நடை வளர்ப்பு குறித்து வேளாண் துறையும், கால்நடை மருத்துவர்களும் பல்வேறு விழிப்புணர்வுகளை (Awareness) ஏற்படுத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் (O.S. Maniyan), பொதுமக்களுக்கு இலவசமாக வெள்ளாடுகளை (Goats) வழங்கி, கால்நடை வளர்ப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். விவசாயிகள் உபத்தொழிலாக கால்நடை வளர்ப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கால்நடை வளர்ப்பை ஊக்குவிப்பதோடு மட்டும் நின்று விடாமல், கால்நடை முகாம்களை (Cattle camp) நடத்தி வருகிறது வேளாண் துறை.
கால்நடை முகாம்:
வாலாஜாபாத் அடுத்து கிதிரிப்பேட்டை, நெய்குப்பம், பூசிவாக்கம் ஆகிய ஊராட்சிகளில் தேசிய வேளாண் நிறுவனம் (National Institute of Agriculture) மற்றும் ஆலிகான் பிரக்சன் சிஸ்டம் நிறுவனம் (Alicon Fraction System Company) சார்பில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
கால்நடைகளுக்கு சிகிச்சை:
கால்நடை மருத்துவர் முகமது இசாத் (Mohammad Issad) தலைமையிலான மருத்துவ குழுவினர் கால்நடைகளுக்கு தடுப்பூசி, குடற்புழு நீக்கம், சினை ஊசி உள்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை (Treatment) அளித்தனர். இதில் பசு, ஆடு, கோழி என 400 கால்நடைகளுக்கு (Livestock's) சிகிச்சை அளிக்கப்பட்டது.
நோய் அறிகுறிகள் குறித்து விளக்கம்:
கிராம மக்கள், கால்நடைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும். கால்நடைகளுக்கு நோய் அறிகுறிகள் எப்படி காணப்படும் என்பது குறித்து மருத்துவ குழுவினர் விளக்கினர். வேளாண் நிறுவன இணை இயக்குனர் விஸ்வலிங்கம், தேசிய வேளாண் நிறுவன அலுவலர் ருத்ரகோட்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கால்நடை முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு உள்ள பிரச்சனையை தெரிவித்து, சிகிச்சை பெற்றனர். இது போன்ற கால்நடை முகாம் அடிக்கடி நடந்தால் எங்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்றும் மக்கள் தெரிவித்தனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
குடும்பத் தேவைக்காக ஆடு வளர்க்கும் அமைச்சர்! கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கும் முயற்சி!
குறைந்த நேரத்தில் காயம் ஏதுமின்றி பால் கறக்க, நவீன பால் கறக்கும் இயந்திரம்!
Share your comments