1. கால்நடை

வெள்ளத்தில் உயிரிழந்த ஆடு- மாடு: புதிய கால்நடை வாங்க கடனுதவி!

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Loan assistance from TN govt

பெருமழை மற்றும் பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு வீட்டுவசதி, தொழிற்கடன், பயிர் சேத நிவாரணம், கால்நடை வாங்க கடனுதவி உள்ளிட்ட 1000 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணத் தொகுப்பு திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.

டிசம்பர் 17 மற்றும் 18, 2023 ஆகிய நாட்களில் தூத்துக்குடி. திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன. மீட்பு பணிகள் பெரும்பாலும் நடைப்பெற்று முடிந்த நிலையில், வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு நிவாரணம் வழங்குவது தொடர்பான அறிவிப்பினை முதல்வர் நேற்று  வெளியிட்டார்.

பயிர்ச்சேத நிவாரணம்- ரூ.250 கோடி:

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களில் சுமார் 2,64,000 ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. இதற்கென இழப்பீட்டு நிவாரணம் மொத்தம் 250 கோடி ரூபாய் வழங்கப்படும். பயிர் சேதம் நேரிட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பயிர்க் கடனும், வேளாண் இயந்திரங்கள் வாங்குவதற்கும் கடன் வழங்கப்படும்.

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தினால் இம்மாவட்டங்களில் விவசாய நிலங்களில் வெள்ளத்தால் அடித்துவரப்பட்ட மண் படிந்துள்ளது. இதனை அகற்றி மீண்டும் விவசாயத்திற்கு ஏற்றவகையில் சீர்செய்து தரும் பணி மாநில வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலமாக கட்டணமின்றி மேற்கொள்ளப்படும், இதற்கென வெளி மாவட்டங்களிலிருந்து தேவையான கருவிகள் மற்றும் உபகரணங்கள் வரவழைக்கப்படும் எனவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

நிலுவையில் உள்ள கடன் தவணைகளுக்கு கால நீட்டிப்பு : பெருமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலுவையிலுள்ள கடன் தவணைகளை செலுத்திவதில் கால நீட்டிப்பு குறித்து மாநில அளவிலான வங்கியாளர் குழுவில் விரைவில் உரிய முடிவெடுக்கப்படும்.

சேதமடைந்த மீன்பிடி படகுகளுக்கு நிவாரணம் - ரூ.15 கோடி: பெருமழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாட்டங்களில் 4928 மீன்பிடி படகுகளும், இயந்திரங்களும் சேதமடைந்துள்ளன. இதற்கென நிவாரணத் தொகையாக 15 கோடி ரூபாய் வழங்கப்படும்.

Read more: SSY சிறுசேமிப்புத் திட்டம்: பெண் குழந்தை வைத்திருப்பவர்களுக்கு குட்நியூஸ்!

கால்நடைகள் வாங்குவதற்கு கடன்: பெருமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 17,000 கால்நடைகளும் 1 இலட்சத்திற்கும் மேல் கோழிகளும் உயிரிழந்தன. இறந்த கால்நடைகளுக்கு நிவாரணமாக பசு, எருமைக்கு 37,500 ரூபாய் வரையிலும், ஆடு, செம்மறி ஆடு ஒன்றிற்கு 4,000 ரூபாய் வரையிலும், கோழி ஒன்றிற்கு 100 ரூபாய் வரையிலும் வழங்கப்படும்.

கால்நடை இழப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய கால்நடைகளை வாங்கிட வசதியாக ரூ.150 இலட்சம் வரை புதிய கடன் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ரூ.3 இலட்சம் வரை வெள்ள நிவாரணக் கடனுதவித் திட்டம், சிறு வணிகர்களுக்கு ரூ.1 இலட்சம் வரை சிறப்பு கடன் திட்டம் என பல்வேறு அறிவிப்பையும் முதல்வர் வெளியிட்டார்.

Read more: மதி அங்காடி- அரசின் உதவியை பெற யாரெல்லாம் தகுதி?

English Summary: Loan assistance to facilitate the purchase of new cattle on behalf of TN govt Published on: 31 December 2023, 03:17 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.