திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் அடுத்த அனைதலையூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் என்பவர். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவர் மூன்று பசு மாடுகள் வைத்து பால் வியாபாரம் செய்து வருபவர்.
இவரது பசுமாடு நேற்று காலை(30-12-20) ஈன்று எடுத்த கன்று குட்டி, இரண்டு தலை, நான்கு கண்களுடன் இருந்தது. இதனை பார்த்த முருகன் குடும்பத்தினர் முதலில் அதிர்ச்சியடைந்து, பின்னர் ஆச்சரியத்தில் முழ்கினர். மேலும், கன்றுக்கு தேவையான முதற்கட்ட உணவுகளை வழங்கி அதனை சுத்தப்படுத்தினர்.
இந்த தகவல் அப்பகுதி மக்களுக்கு தெரிய வர, குடும்பம் குடும்பமாக வந்து கன்றுக் குட்டியை வியந்துப் பார்த்து செல்கின்றனர். மேலும், அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஆட்டோ, டூ வீலர் போன்ற வாகனங்களில் வந்து கன்று குட்டியை வியந்து பார்த்து செல்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.
முன்பெல்லாம், இரட்டை குழந்தை தொடங்கி ஒட்டி பிறந்த இரட்டையர்கள் என பல மாற்றங்களை, மனிதர்களில் மட்டுமே பார்த்திருந்தோம். அதன் பின்னர் கால்நடை விலங்குகளிலும், இந்த மாற்றம் காணப்பட்டது. ஆனால் இம்முறை, இது முற்றிலுமாக வெறுபட்டு, இரண்டு தலை, நான்கு கால்களுடன் பிறந்த கன்றுக்குட்டி நம்மை ஆட்சரியத்தில் ஆழ்த்துகிறது.
எனவே, இத் தகவலை அறிந்த கங்கைகொண்டான் கால்நடை மருத்துவத்துறை அதிகாரிகளும், மருத்துவர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கன்றுக்குட்டியை பார்வையிட்டு, கன்றுக்கு தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர்.
மேலும் படிக்க:
Share your comments