கால்நடைகள் வளர்ப்பு, ஊட்டச்சத்து, இனப்பெருக்கம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும், கால்நடை விவசாயிகளுக்கு உள்ள சந்தேகங்களை நீக்கி, அவர்களுக்கு வழிகாட்டுவதற்காக தேசிய கால்நடை விவசாயிகள் மேம்பாட்டு வாரியம் (NDDB) பசு மித்ரா (Pasu Mitra) என்ற புதிய கால் சென்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.
விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதோடு மட்டுமல்லாமல், அவர்களது கால்நடைகளின் இனப்பெருக்கம், பால் உற்பத்தி உள்ளிட்டவற்றை அதிகரிக்கும் முயற்சிகளிலும் NDDB துணை நிற்கிறது.
இந்த பசு மித்ரா கால்சென்டர், இந்திய கால்நடை விவசாயிகளை மேலும் பலப்படுத்தும் முயற்சி என்றும், அறிவியல் அடிப்படையில், கால்நடைகளின் இனப்பெருக்கம் குறித்த விழிப்புணர்வை விவசாயிகளிடையே ஏற்படுத்தவும் இந்த கால் சென்டர் உதவும் எனவும் NDDB தலைவர் திலீப் ராத் தெரிவித்துள்ளார்.
தங்களுக்குத் தேவையான தகவல்களைப் பெற விவசாயிகள் 7574835051 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு விளக்கங்களைப் பெறலாம். திங்கள் முதல் வெள்ளி வரையிலான வாரத்தின் முதல் 5 நாட்களும், காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
கையேடு (Handbook)
இதேபோல், விவசாயிகளுக்கான கையேடு ஒன்றையும் 0NDDB வெளியிட்டுள்ளது. இதில், கால்நடைகளின் பராமரிப்பு, கூட்டுறவு பால் உற்பத்தி சங்கங்களின் மேம்பாடு, அரசின் கொள்கைகள், மானியங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் படிக்க...
Share your comments