திருவண்ணாமலையில் வரும் 18ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த பயிற்சி நடைபெற உள்ளதால், கால்நடை விவசாயிகள் தவறாது கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அதிக லாபம் (more profit)
குறைந்த முதலீட்டில் நிறைந்த லாபம் தரும் தொழில்களில் கோழி வளர்ப்பும் ஒன்று. அதிலும், நீங்கள் வாடிக்கையாளர்களின் உடல் நலத்தையும் கருத்தில் கொண்டு செயல்படுபவராக இருந்தால், நாட்டுக் கோழி வளர்ப்பு நல்ல பலன் தரும்.
அவ்வாறு நாட்டுக்கோழி வளர்க்க விரும்பும் விவசாயிகளையும் கால்நடை வியாபாரிகளையும் ஊக்குவிக்கும் வகையில், ஒருநாள் நாட்டுக்கோழி வளர்ப்புப் பயிற்சி நடைபெற உள்ளது.
பயிற்சி நடைபெறும் நாள் (Date of Training)
திருவண்ணாமலையில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வரும் 18.1.2021 ம் தேதி, திங்கள்கிழமை அன்று நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது.
அனுமதி இலவசம் (No fee)
-
இதில் பங்கேற்பவர்கள் கட்டணமாக எந்தத் தொகையும் செலுத்தத் தேவையில்லை.
-
முதலில் முன்பதிவு செய்யும் 20 பேருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
-
முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட நடைமுறைகளுடன் பயிற்சி நடைபெறும் என திருவண்ணமலையில் அமைந்துள்ள கால்நடை மருத்துவ அறியில் பல்கலைக்காக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபரங்களுக்கு
கால்நடை மருத்துவ அறிவியல்
பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,
வடஆண்டாபட்டு,
புறவழி சாலை ரோடு,
திருவண்ணாமலை.
முன்பதிவுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:
04175 298258, 95514 19375.
மேலும் படிக்க...
தென் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு- மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்!
நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிர்ணயம் - விவசாயிகள் கவனத்திற்கு!
Share your comments