Poultry farm setup and things to look out for
இன்றைய நிலையில் ஆர்கானிக், ஆர்கானிக் என்று மக்கள் இயற்கை உணவு முறைகளை நாடி செல்கின்றனர். இந்நிலையில், இயற்கையாக கிடைக்கும், நாட்டு கோழிகளுக்கு நல்ல டிமேன்ட் உள்ளது, இதற்கென தனி வாடிக்கையாளர்களும் உண்டு. எனவே நாட்டுக்கோழி பண்ணை அமைத்து, மக்கள் பயன்பெறலாம். இதில் மக்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன, இதைப் பற்றிய விரிவான பதிவை, இந்த பதிவில் பார்க்கலாம்.
கோழி தீவனம்
கோழிகளுக்கு உணவாக பச்சை கீரை வகைகள், அசோலா, கினியா புல், கோ-4, குதிரை மசால், காய்கள் மற்றும் அரிசி போன்றவற்றை தீவினமாக கொடுக்கலாம். பிறகு இது இயற்கையாக சுற்றி திரிவதால், பொதுவாக கோழிகள், காட்டில் உள்ள புழு பூச்சிகளையும் உணவாக உட்கொள்ளும் என்பதும் குறிப்பிடதக்கது.
நோய் தடுப்பு
தினமும் அனைத்து கோழிகளையும், நன்றாக கவனிக்க வேண்டும். ஏதாவது ஒரு கோழிக்கு நோய் வந்தாலும், அது வேகமாக அனைத்து கோழிகளுக்கும் பரவி விடும் என்பதை நினைவில் கொள்க. எனவே ஒரு கோழிக்கு நோய் வந்தாலும் உடனடியாக கண்டு பிடித்து மருந்து கொடுத்து விடுவது அவசியமாகும்.
விற்பனை
குஞ்சுகள் வளர்ந்த 3 மற்றும் 4 மாதங்களில் இருந்து விற்க ஆரம்பிக்கலாம். இயற்கையாக வளர்க்கப்படும், கோழிகள் என்பதால் அந்த பகுதில் உள்ள பொதுமக்களே நல்ல ஆர்வத்துடன் வாங்கி செல்வார்கள் என்பது குறிப்பிடதக்கது, மேலும் விற்பனை நடக்குமோ நடக்காதோ என்ற அச்சம் இருக்காது. மேலும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், கோழிகளை, வியாபாரிகளுக்கு குறைந்த விலைக்கு விற்காமல் நகர் புறங்களில் உள்ள அசைவ உணவு விடுதிகளுக்கு கோழிகளை சப்ளை செய்வதன் மூலம் அதிக லாபம் ஈட்டலாம்.
பண்ணை அமைப்பு முறை
நாட்டு கோழிகள் இயல்பாகவே மிகவும் பலமானவை, மழை, காற்று, அதிக வெயில் போன்றவற்றை எளிதாக தாங்கும் குணம் கொண்டவை, எனவே திறந்த வெளியில் கம்பி வேலி அமைத்து எளிதாக வளர்க்கலாம். இதற்கு "டயமன்ட் கிரில்" என்ற மிக சிறிய ஓட்டைகள் உள்ள வேலிகள் அமைப்பதன் மூலம் கோழி குஞ்சுகள் வெளியே செல்வதை தடுக்க எளிதாக இருக்கும். நாட்டு கோழியை தேடி பாம்புகள் வருவது வாடிக்கையான ஒன்றாகும். அதனால், வேலியின் கிழே வலை அடித்து விடுவதன் மூலம் பாம்புகள், கோழிகளை நாடி செல்வதை தவிர்த்திடலாம். பொதுவாக ஒரு ஏக்கருக்கு 2000 கோழிகள் வரை எளிதாக வளர்க்க முடியும் என்பது சிறப்பாகும். இதற்கு கொட்டகை என்று பெரிதாக ஒன்றும் தேவைப்படுவதில்லை. மழை, வெயில் போன்றவற்றில் இருந்து ஒதுங்க சிறிய செலவிலான கூரை போன்ற கொட்டகை போதுமானதாகும். மேலும் சில சேடிகள் பெயரை அறிந்திடுங்கள்.
மேலும் படிக்க: தேனீ வளர்ப்பைப் பெருக்கும் பணியில் நிபுணர்கள்!
மேலும் பாம்புகள் வருவதை தவிர்த்திட, சிறியநங்கை, பெரியநங்கை நாகதாளி, ஆகாச கருடன் போன்ற சேடிகளின் வாசனை தன்மைக்கே பாம்புகள் வராது.
மேலும் படிக்க:
Share your comments