கிராமப்புற மகளிரின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருகிறது அக்ரோடெக் ஒருங்கிணைந்த விவசாய உற்பத்தியாளர் நிறுவனம். கிராமப்புற மகளிரை பொருளாதாரரீதியாக மேம்படுத்தும் நோக்கத்தில் குழுவாக அவர்களை ஒருங்கிணைத்து ஆடு வளர்க்கும் திட்டத்தை இந்நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.
ஆடு வளர்ப்பு திட்டம்:
விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திண்டிவனம், பாண்டிச்சேரி, கன்னியாகுமரி, திண்டுக்கல், திருவண்ணாமலை, அரியலூர், திருவாரூர் ஆகிய ஒன்பது மாவட்டங்களில் ஆடுவளர்ப்புத் திட்டத்தை (Goat breeding project) செயல்படுத்தி வருகிறது. இந்திய அளவில் செயல்படும் விவசாய உற்பத்தியாளர்கள் நிறுவனத்தில் (company of agricultural producers) விவசாயிகளுக்கு ஆடுகளை விலையில்லாமல் விநியோகித்து அவர்கள் ஆடு வளர்ப்பதற்குத் தேவையான உதவிகளையும், வழிகாட்டுதலையும் (Guidance) வழங்கி வருகிறது.
ஆடு வங்கித் திட்டம்:
விலையில்லாமல் விநியோகம் செய்யப்படும் ஆடுகளின் தொடர் பராமரிப்புக்கும் இந்நிறுவனம் இலவசமாகவே (Free) வழிகாட்டுகிறது. இதேபோல் இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகளே நேரடியாக ஆடுகளை வாங்கவும், விற்கவும் சந்தைக்கு மாற்றாக 'ஆடு வங்கித் திட்டம்' (Goat Bank Scheme) என்னும் திட்டத்தையும் இந்த நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம் ஏழை விவசாயிகளுக்கு ஆட்டின் எடைக்கு ஏற்ற நியாயமான விலை கிடைக்கிறது. இடைத்தரகர்கள் இல்லாமல் செயல்படுத்தப்படும் இந்த நடைமுறையால் விவசாயிகளுக்கு உரியவிலை கிடைப்பதோடு, வியாபாரிகளுக்கும் நேரடியாக தரமான ஆட்டை வாங்கும் சூழல் உருவாகியுள்ளது.
வீட்டில் இருந்தே வருமானம்:
நாட்டுமாட்டு சாணத்தில் இருந்து விபூதி, வரட்டி, அகல்விளக்கு தயாரித்தல், இயற்கையான முறையில் சோப்பு (Soap) தயாரித்தல் ஆகியவை தொடர்பாக பயிற்சி அளிக்கப்படுகிறது. கிராமப்புற மகளிர்களுக்கு இதற்குத் தேவையான மூலப்பொருள்களை வழங்குவதோடு அவர்களிடம் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தைக் கொடுத்து அந்தப் பொருள்களைப் பெற்றுக்கொள்ளவும் செய்கிறது. இதன்மூலம் ஒரு கிராமப்புற மகளிர் சராசரியாக 5000 ரூபாய் வரை வீட்டில் இருந்தே வருமானம் ஈட்டமுடியும்.
ஒருங்கிணைந்த விவசாய உற்பத்தியாளர்கள் நிறுவனமானது நேரடி பங்குதாரர்கள், ஐ.டி. துறை மற்றும் தொழிலில் ஆர்வம் உள்ளவர்களோடு இணைந்து செயல்பட விரும்புகிறது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
கோடிக்கணக்கில் சம்பாதிக்க எளிய வழி முதலீடு தான்! நிபுணர்கள் கருத்து!
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் குளிர்கால உணவுகள்! நீங்களும் சாப்பிடுங்க!
Share your comments