பல்மூலிகை மருந்தைப் பயன்படுத்தி, கறவை மாடுகளில் தோன்றும் முக்கியப் பிரச்னையான உண்ணிகளைக் கட்டுப்படுத்தலாம்.
பல்மூலிகை மருந்து (Herbal medicine)
எனவே பல் மூலிகை மருந்தைத் தயாரிக்கும் மற்றும் பயன்படுத்தும் முறைகள் பற்றிப் பார்ப்போம்.
தேவையானைப் பொருட்கள்
வேப்பஇலை
நொச்சி இலை
தயாரிக்கும் முறை (Preparation)
-
4 லிட்டர் தண்ணீரில் 2.5 கிலோ வேப்ப இலையைச் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
-
இதேபோல், 2 லிட்டர் தண்ணீரில் 1 கிலோ நொச்சி இலையையும் சேர்த்து அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும்.
-
கொதிநிலை வரை தனியாக வேகவைக்கவும். பின் மெதுவாக ஆற விட வேண்டும்.
-
இலைகளை வேகவைத்த பாத்திரங்களில் 12 நேரத்திற்கு ஊர விடவும்.
-
ஊறியபின் வேப்பம் மற்றும் நொச்சி சாற்றை தனித்தனியாகச் சேமித்து வைத்துக் கொள்ளவும். இந்த சாறுகள் ஒரு மாதத்திற்கு மருத்துவ குணங்களை இழக்காது.
வெளிப்பூச்சுக்கு (External Apply)
-
மாடுகளின் மேல் வெளிப்புறப் பூச்சாகப் பயன்படுத்த 300 மி.லி வேப்ப மற்றும் 100 மி.லி நொச்சி சாற்றை எடுத்து 3.6 லிட்டர் தண்ணீரில் கலக்கவும்.
-
ஊறியயின் வேப்பம் மற்றும் நொச்சி சாற்றை தனித்தனியாக சேமித்து வைத்து கொள்ளவும் இந்த சாறுகள் ஒரு மாதத்திற்கு மருத்துவ குணங்களை இழக்காது.
-
மாடுகளின் மேல் பயன்படுத்த 300 மி.லி வேப்ப மற்றும் 100 மி.லி நொச்சி சாறை எடுத்து 3.6 லிட்டர் தண்ணீரில் கலக்கவும்.
-
கலந்தபின் கலவையை மாடுகளின் மேல் தெளிக்கவும். உடல் முழுவதும் மருந்து படுவதை உறுதி செய்யவும்.
-
நாள் ஒன்றுக்கு 2 முறை (காலை மற்றும் மாலை) என்று 2 நாட்களுக்கு தெளிக்கவும். உண்ணிகள் தொடர்ந்து நீடித்தால் 3-வது நாளும் தெளிக்கலாம்.
-
தெளிக்கும் போது உங்கள் பட்டியலில் உள்ள அனைத்து மாடுகளுக்கும் கட்டுதோரி பகுதியிலும் தெளிக்கவும்.
இவ்வாறு செய்வதன் மூலம் உண்ணிகளை அறவேக் கட்டுப்படுத்த முடியும்.
மேலும் படிக்க...
பம்ப் செட்டுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும்- முதல்வர் அறிவிப்பு!
உணவுப் பூங்கா அமைக்க விருப்பமா?அழைக்கிறது மத்திய அரசு!
நீர்நிலைகளை சிறப்பாக பயன்படுத்தும் தமிழக விவசாயிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு!
Share your comments